நாடு முழுவதும் சமீப காலமாக தொடர்ந்து பல நாய் கடி சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், பிட்புல்(pit bull) நாய் ஒன்று மாட்டை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பசுவை கடித்த நாய்


பார்ப்பதற்கே பயங்கரமாவ இருக்கும் இந்த வீடியோவில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் போது மாட்டின் தாடையை நாய் வலுவாக கடித்துப்பிடித்திருப்பதை காண முடிகிறது. கான்பூரின் சர்சய்யா காட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மூர்க்கத்தனமான நாய் ஒன்று மாட்டின் தாடையில் கடித்து அப்படியே ஒட்டிக்கொண்டது. சுற்றியிருப்பவர்கள் எவ்வளவு முயன்றும் அதனை பிரிக்க முடியவில்லை. சிறிது நேர போராட்டத்திற்கு பிறகுதான் நாயே தானாக மாட்டின் முகத்தில் இருந்து அதன் பிடியை விட்டது. ஒரு மூங்கில் கம்பை வைத்து தாக்கி அந்த மாட்டை நாயின் உரிமையாளர் காப்பாற்றிய போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் மக்கள், குறிப்பாக சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளதால், தற்போது மலையடிவாரத்திற்கு செல்ல அஞ்சுகின்றனர். 






கமெண்ட் செக்ஷன்


இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதிலிருந்து, 7.5K பார்வைகளைப் பெற்றுள்ளது. “பிட்புல்லை செல்லப் பிராணியாக வைத்திருப்பதற்கு உரிமம் தேவை இல்லையா??? இந்த இனம் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது," என்று ஒரு ட்விட்டர் பயனர் கமெண்ட் செக்ஷனில் தெரிவித்தார். மற்றொரு நபர், "இந்த நாய்கள் என் கட்டுப்படுத்தப்படவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று யாராவது கேட்கும்போது மக்கள் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அடிப்படையில் நாய்கள் மற்றும் பசுக்கள் விலங்குகள் தானே? அவற்றை அவற்றின் இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும், எல்லா இடங்களிலும் கொண்டு வந்து மக்களின் உயிரைப் பணயம் வைக்காதீர்கள்", என்று கூறினார். 


தொடர்புடைய செய்திகள்: ”ஆண்கள் அசைவம் சாப்பிட்டா செக்ஸுக்கு தடை போடணும்..” : பீட்டா அமைப்பு வைத்த புது கோரிக்கை


வெறிநாய் கடி


கேரளாவில் இப்போது மக்களை தெரு நாய்கள் கடிக்கும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட நாய்கள் தெருவில் அதிக அளவில் உலவி வருகின்றன. கேரள அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் இதுவரை 21 பேர் நாய்கள் கடித்து இறந்துள்ளனர். மேலும் பலருக்கு ரேபிஸ் ஊசியும் எடுபடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் கேரளாவை உலுக்கி உள்ளது.


கோழிக்கோட்டில் மாணவனை தாக்கிய நாய்


இதற்கிடையில், கேரளாவின் கோழிக்கோட்டில் 7 ஆம் வகுப்பு மாணவனை தெருநாய் தாக்கி காயப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. சிசிடிவியில் பதிவாகி, ரெடிட்டில் பதிவேற்றப்பட்ட விடியோவில், 7-ம் வகுப்பு மாணவன் வீட்டின் வெளியே சைக்கிளில் செல்வதைக் காணமுடிந்தது. வேறு சில குழந்தைகளும் குடியிருப்பில் இருந்து வெளியே வருகின்றனர். சில வினாடிகளுக்குப் பிறகு, தெருநாய் ஒன்று சிறுவனை நோக்கி ஓடி வந்து அவன் மீது பாய்ந்ததில் அந்த மாணவர் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் தப்பிக்க முயன்ற சிறுவனின் காலை நாய் கடித்து விடாமல் பிடித்துள்ளது. மாத்ருபூமி செய்தியின்படி, கோழிக்கோடு அரக்கினார் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 7 ஆம் வகுப்பு சிறுவன் நூரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நூராஸைத் தவிர, அதே தெருநாய் ஞாயிற்றுக்கிழமை பேப்பூர் நகருக்கு அருகில் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேரைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.