சராசரியாக அனைத்து பிள்ளைகளுக்குமே தங்களுடைய பெற்றோரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் என்ன சாதனை செய்திருக்கிறார்கள் என்பதை பெற்றோருக்குக் காட்ட ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அந்த ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்திய விமானி ஒருவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார், அது வைரலாக பரவி பலரை 'அடடா'! என ஆச்சரியப்பட வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் desipilot11 என்ற யூஸர் ஹேண்டிலில் இயங்கும் அவர் விமானி கமல் குமார். சமீபத்தில் தனது பெற்றோரை ஜெய்ப்பூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்று கேமராவில் வீடியோ பதிவு செய்துள்ளார். மனதைக் கவரும் இந்த வீடியோ உடனடியாக வைரலானது மற்றும் நெட்டிசன்கள் அவரைத் தொடர்ச்சியாகப் பாராட்டி வருகின்றனர்.






இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பார்வைகளைக் கொண்ட அந்த வீடியோவில், விமானத்தை ஓட்டப் போவது தங்கள் மகன் என்பதை அறியாத விமானியின் பெற்றோர், விமானத்திற்குள் நுழைந்ததும் பைலட் சீருடையில் தங்கள் மகன் இருப்பதைக் கண்டு திகைத்து மகிழ்ந்ததைக் காட்டுகிறது. அந்த வீடியோவிற்கு கமல், "நான் பறக்க ஆரம்பித்ததில் இருந்து இதற்காகவே காத்திருந்தேன், கடைசியில் ஜெய்ப்பூருக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒருவகையான மகிழ்ச்சியான உணர்வு" என்று பதிவிட்டுள்ளார்.


அந்த நபர் தனது குடும்ப உறுப்பினர்களை காக்பிட்டிற்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் படங்களைக் கிளிக் செய்தனர்.


இந்த வீடியோவால நெட்டிசன்கள் கவரப்பட்டு விமானியை பாராட்டி வருகின்றனர். "இதயத்தை இதமாக்குகிறது" என்று ஒரு பயனர் இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர் "ஒவ்வொரு ஆர்வமுள்ள விமானியின் கனவும் இதுதான்" என்று கமெண்ட் செய்துள்ளார். மூன்றாவது நபர், "இன்று நான் பார்த்த சிறந்த விஷயம் இதுதான்!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.