உத்திர பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 273  தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றார். இதனையடுத்து 2 ஆவது முறையாக உத்திரபிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி  அவருக்கி ஆளுநர்ஆனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழா உத்திரபிரதேசத்தில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி  பிரம்மாண்டமாக  நடந்தது.


இந்த விழாவில் பிரதமர்மோடி, பல மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் விழாவிற்கு வந்த பாஜக தலைவர்கள் அடங்கிய இண்டிகோ விமானத்தை பாஜக எம்.பி ராஜீவ் பிரதாப் ரூடி ஓட்டினார். பயணத்தை ஓட்டுவதற்கு முன்னால், விமானத்திற்கு வந்த பாஜக தலைவர்களை அவர் வரவேற்றார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.  






பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜிவ் பிரதாப் ரூடி, தற்போது பீஹார் மாநில சரண் தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவர் விமான ஓட்டுவதற்கான உரிமம் வைத்துள்ள நிலையில் அவர் அன்று விமானம் ஓட்டினார். இது குறித்து அவர் கூறும் போது, “எம்.பிக்களை விமானத்தில் அழைத்து சென்றது எனக்கு புதிய அனுபவம்”என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண