Sabarimala: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. நள்ளிரவில் காத்திருந்து சாமி தரிசனம்..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் நள்ளிரவிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

Continues below advertisement

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் நள்ளிரவிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

Continues below advertisement

உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.  சபரிமலை அய்யப்பன் கோயிலை பொறுத்தவரை மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். ஆனால் கார்த்திகை, மார்கழி மாதம் மற்றும் தை முதல் தேதியில் நடைபெறும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவது வழக்கம். 

அதன்படி நடப்பாண்டு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 17 ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.  இது சீசன் காலம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021, 2022 ஆம் ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் பெரிய அளவில் கூடவில்லை. ஆனால் இம்முறை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதி என்ற நிலையில், இம்முறை அந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. அதேசமயம் ஆன் தி ஸ்பாட்டிலும் நேரடியாக முன்பதிவு செய்யாத பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காட்டு வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களும் சபரிமலை சன்னிதானம் நோக்கி வருவதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்ய 16 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.  

இதனால் எதிர்க்கட்சிகள் கேரள அரசு மீது பக்தர்களை சரிவர கவனிப்பதில்லை என குற்றம் சாட்டியது. இதனை மறுத்துள்ள கேரள அரசு சபரிமலையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சன்னிதானம் பெரிய நடைப்பந்தலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் உறுதி செய்வதில் கேரள அரசு, திருவாங்கூர் போர்டு ஆகியவை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola