நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. நாட்டிலே கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது. இதன் காரணமாக. அந்த மாநிலத்தில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, குஜராத், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு தவிர, பிற மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதுநிலைப் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

#NEETPG2021 POSTPONED !

Health & safety of our young doctors is paramount.

Next date to be decided after reviewing the situation later. @PMOIndia @MoHFW_INDIA #Unite2FightCorona pic.twitter.com/5FFzcje3iB
— Dr Harsh Vardhan (@drharshvardhan) April 15, 2021

இதையடுத்து, முதுநிலைப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.