தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.


 





இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக், “கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு கொரோனா வரலாம். ஆனால், உயிரிழப்புகள் ஏற்படாது. அதனால், அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவி, தனிமனித இடைவெளியை பின்பற்றினால்தான் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று கூறினார். செய்தியாளர்களின் சந்திப்பின்போது, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.