ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட்டில் பெட்ரோல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் விலை குறைப்பு சலுகை பொருந்தும் என்றும் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார். மேலும், 2022 ஜனவரி 26ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வருவதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் படிக்க: ’நாங்க ஆட்சிக்கு வந்தா அருமையான சாராயம்....’ - ஆந்திரா பாஜக தலைவரால் பரபரப்பு
"மாநிலத்தின் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, ஜனவரி 26 முதல் இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 ரூபாய் மானியம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறினார். அதிகபட்சமாக மாதம் 10 லிட்டர் பெட்ரோலை இருசக்கர வாகன ஓட்டிகள் சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 81 இடங்களில் 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க: Govt Job: 'இருப்பது 15...வந்தது 11 ஆயிரம்' - வேலையில்லாத் திண்டாட்டத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிய பலே சம்பவம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தை தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்