முட்டை சாப்பிடுபவர்கள் பெண்ணியவாதிகளாக இருக்கவே வாய்ப்பில்லை என பீட்டா அதிரடியாக பேசியுள்ளது. பீட்டாவின் இந்த கருத்து இணையத்தில் காமெடி கண்டண்டாக கலாய்க்கப்பட்டு வருகிறது


நேற்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அனைத்து தரப்பினரும் பெண்கள் பாதுகாப்பு,பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் குறித்தெல்லாம் கருத்து தெரிவித்தனர். ஆனால் பீட்டா இந்தியாவோ அனைவரையும் அசரடிக்கும் விதமாக முட்டையையும், கோழியையும்கையில் எடுத்து பெண்கள் தினத்துக்கு கருத்து தெரிவித்துள்ளது.


பெண்ணியவாதி இல்லை...


பெண்கள் தினத்தை முன்னிட்டு பீட்டா இந்தியா அமைப்பின் ஊட்டச்சத்து நிபுணரும் மருத்துவருமான கிரண் அஹூஜா கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், இப்போது பலரும் பெண்ணியவாதம் குறித்து பேசுகிறார்கள். பாலினவாதம் வளர்கிறது. பெண்ணியவாதிகள் மற்ற உயிரினத்தில் உள்ள பெண் பாலினம் குறித்தும் கவலை கொள்ள வேண்டும். மாடுகள் கறக்கும் பாலானது அதன் கன்றுகளுக்குத்தான். ஆனால் நாம் அதனை பிடிங்கிக் குடிக்கிறோம். அந்த வலியை தாய்மார்களும், கர்ப்பிணிகளும் உணரலாம்.




கோழி முட்டை..


அதேபோல் கோழிகள் சுரண்டலுக்கு ஆளாகின்றன. கோழி முட்டையிட்டால் அதனை நாம்  சாப்பிட்டு விடுகிறோம். கோழி முட்டையை சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக பெண்ணியவாதிகளாக இருக்கவே முடியாது. விலங்குகள் ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. அவைகளுக்கும் உணர்வுண்டு, இந்த பெண்கள் தினத்தில் பெண் உயிரினங்கள் மீதான துஷ்பிரயோகத்தை நிறுத்த முற்படுங்கள். பெண்ணியவாதிகள் இந்த பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சைவ உணவுகளை சாப்பிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்


பெண்கள் தினத்துக்கு பெண்ணுரிமை தொடர்பான கருத்துகளை பேசாமல் கோழி முட்டைக்கும், பாலுக்கும் சப்போர்ட் செய்து கட்டுரை வெளியிட்ட பீட்டா இந்தியாவை இணையத்தில் பலரும் கலாய்த்து வருகின்றனர். அதேவேளையில் பீட்டா சொல்வதில் என்ன தவறு என சிலர் ஆதரவு பதிவுகளையும் அள்ளித்தூவிக்கொண்டு இருக்கின்றனர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண