மாமியாரின் தகாத உறவைக் கண்டித்த மருமகளை, மாமியாரின் ஆண் நண்பர் முகத்தில் குத்தி கடுமையாக தாக்கிய சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பிரச்னைகளுக்கு பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களும் காரணமாக இருப்பதும் உண்டு. ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்களும் ,குடும்ப உறுப்பினர்களுமே பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தொடக்கப் புள்ளியாக உள்ளனர். இதனை நிரூபிக்கும் விதமாக கேரளாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 


மாமியார்.. 


கேரள மாநிலம்  பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. தற்போது பொறியியல் நான்காம் ஆண்டு  படித்து வரும் இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முகேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வைஷ்ணவி மாமியார் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் தன்னுடைய மாமியாருக்கும் அதே பகுதியில் உள்ள மற்றொருவருக்கும் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. வைஷ்ணவி வீட்டில் இருக்கும்போதே அந்த நபர் மாமியாரைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள், இது குறித்து மாமியாரிடம் சண்டையிட்டுள்ளார். 






இதனால் வாக்குவாதம் முற்றி தகராறும் ஏற்பட்டுள்ளது. இப்படி பிரச்னை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நபர் மாமியாரைப் பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அந்த நபரை வாசலில் மறைத்த மருமகள் வைஷ்ணவி அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் வைஷ்ணவியின் முகத்தை பலமாக தாக்கியுள்ளார். கடுமையாக முகம் பாதிக்கப்பட்டு கண் அருகே கடுமையான காயமும் ஏற்பட்டது. உடனடியாக மருமகள் வைஷ்ணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி, 


கணவர் வேலைக்கு சென்றதும் மாமியார் தன்னை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார் என்றும் தண்ணீர் கேட்டால், டாய்லெட் தண்ணீரை குடித்துக்கொள் என்று கூறி விடுவார் என்று தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.