சமூக வலைதளங்களில் , ரயில் தண்டவாளத்தில் ஒருவர் உறங்கும் காட்சியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை, பலரும் பகிர்ந்து பலவிதமாக கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்
.
அந்த வீடியோவில், ரயில் தண்டவாளத்தில் ஒரு நபர் தலை வைத்து உறங்கும் காட்சியை பார்க்க முடிகிறது. மேலும், குடையை பிடித்தவாறு தூங்குவதை பார்க்க முடிகிறது.
நல்வாய்ப்பாக, அந்த தண்டவாளப் பாதையின் வழியாக வந்த ரயில் ஓட்டுநர் என அழைக்கப்படும் லோகோ பைலட், சுதாரித்துக் கொண்டு, ரயிலை சரியான நேரத்தில் நிறுத்தியிருக்கிறார். உடனடியாக, கீழே இறங்கி வந்து அவரை எழுப்பி விட்டு, அந்த இடத்தில் இருந்து அவரை அகற்றி , ரயில் புறப்பட்டுச் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன.
இது நடந்த பகுதியானது, உத்தர பிரதேசம் என பதிவை பார்த்து தெரிய முடிகிறது, ஆனால், அங்குதான் நடைபெற்றதா என்பதன் உண்மைத்தன்மை கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில், இந்த பதிவுக்கு கீழே பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.
ஒரு பயனர் தெரிவிக்கையில், அவர் ஏதேனும் தற்கொலை முயற்சிக்காக இப்படி செய்திருப்பாரோ என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் ” மது போதையில் போதை மயக்கத்தில் உறங்கியிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார் “
மேலும் சிலர், ”அவரை லோகோ பைலைட் இரண்டு அறை கொடுத்திருக்க வேண்டும் என கோபமாக கருத்துக்களையும் பார்க்க முடிந்தது”
சிலர் குறிப்பிட்டுள்ளதாவது, “ நல்ல வேலை, லோகோ பைலட்டை பாராட்ட வேண்டும் , ரயிலை சரியான நேரத்தில் நிறுத்தி, ஒரு உயிரை காப்பாற்றியுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.