புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 2022 ஜனவரி 2 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே பாதிப்பு கணிசமான அளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் பொருட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 2022 ஜனவரி 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
புத்தாண்டு கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 30, 31,1 ஆம் ஆகிய நாட்களிலும் இரவு ஊரடங்கில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. 31-ஆம் தேதி இரவு, ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதி இரவு ஆகிய நாட்களில், விடியற்காலை 2 மணியிலிருந்து 5 மணி வரை மட்டுமே இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Perarasu Speech : அஸ்வின கூட விட்டுருவேன்.. ஆனா ப்ளு சட்டை மாறன.. கொந்தளித்த பேரரசு!
புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் இதுவரை ஒமைக்ரான் தொற்று இல்லை. இதனால் நாம் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. அண்டை மாநிலமான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
Kamal Speech: நான் திமிருல பேசுறென்னு நினைக்காதீங்க - கமல்!
இந்தநிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இதனால் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் அதிகளவில் குவிந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாடுவதன் மூலம் ஒமைக்ரான் வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள முடிவை முதலமைச்சர் ரங்கசாமி மறுபரிசீலனை செய்யவேண்டும்.
பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்
பிரதமர் மோடி நல்லாட்சி தினம் கொண்டாடுகிறார். இந்திய நாட்டில் அந்தநிலை இருக்கிறதா என்றால் இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் கூட நல்லாட்சி என்று கூறுகிறார்கள். நல்லாட்சி எங்கே நடக்கிறது. நல்லாட்சி தினம் கொண்டாட பா.ஜ.க.வுக்கு தகுதி இல்லை. புதுச்சேரியில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, மாமூல் வேட்டை நடக்கிறது. இதனை முதலமைச்சர் வேடிக்கை பார்த்து வருகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி அதில் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்