சமூக வலைதளத்தில் எப்போதும் நின்றுபோன வாகனத்தை சிலர் தள்ளும் வீடியோ எப்போதாவது வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் இந்த முறை அந்த வண்டி காரோ, பேருந்தோ அல்லது லாரியோ இல்லை. வடிவேலு காமெடியில் வருவதை போல் அமவுண்ட் பெருசா இருந்த வண்டியும் பெருசா இருக்கும் பரவாயில்லா. அது என்ன வண்டி என்ற கேட்டவுடன் ரயில் என்று கூறுவார். அந்த மாதிரி இந்த வீடியோவில் வருவது ஒரு ரயில்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஹர்தா-இத்ராஸி ரயில் நிலையங்களுக்கு நடுவில் திம்ராணி என்ற பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் ரயில் பாதையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய ஒரு ரயில் எஞ்சின் சென்றுள்ளது. அந்த பழுதை சரி செய்த பிறகு ஏற்பட்ட மின்னணு கோளாறு காரணமாக அந்த எஞ்சினை இயக்க முடியவில்லை. இதனால் அந்த எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு தள்ளி சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பகிரப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பார்த்த பலரும் வியந்து தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் அது எப்படி ஒரு ரயில் எஞ்சினை மனிதர்களை வைத்து தள்ளவைப்பது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
மற்றொரு பிரிவினர் இந்த மாதிரி செயல் எல்லாம் யார் இவர்களுக்கு கற்றுத்தருகிறார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ வெளியானது மூலம் ஒரு சில சர்ச்சை கருத்துகளும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மைனஸ் 28 டிகிரி... 11,562 அடி உயரம்... உலகின் மிக உயரமான தியேட்டரில் திரையிடப்படும் பெல்பாட்டம்!