நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) கொண்டப்பட்டு வரும் நிலையில், #KrishnaJanmashtami என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.


ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கியிருந்தால் அது கோகுலாஷ்டமி என்றும், அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவனை வழிபடுவர்கள் கோகுலாஷ்டமி என்றும், பெருமாளை வழிபடுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் பகவான் கிருஷ்ணருடைய பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தையின் பாத சுவடுகளை வீட்டின் வாசலில் இருந்து வீட்டுகுள் வருவது போல வரைவார்கள். இதன்மூலம், கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக நம்பப்படுகிறது. குழந்தைகள் இருக்கும் வீட்டில், குழந்தையின் பாத சுவடுகளை வைத்து மகிழ்வார்கள். மேலும், குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து விழாவை சிறப்பித்து கொண்டாடுவார்கள்.


 






இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். வடமாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பல ஊர்களில் உள்ள இஷ்கான் கோயில்கள் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. நண்பர்கள், உறவினர் மற்றும் பிரபலங்கள் உள்பட பலர் ஜென்மாஷ்டமி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் இந்த விழாவை ஜென்மாஷ்டமி என்று அழைப்பார்கள்.


 






ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும்,  #KrishnaJanmashtami என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது. ஒரு பக்கம் பாராலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பதக்கம் மேல் பதக்கம் குவித்து வருவதால், அதுவும் டுவிட்டரில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்த அவானி லெகாரா ட்ரெண்டிங்கில் இரண்டாம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இன்றையநாள் தொடக்கம் முதலே, நல்ல நாளாகவும், நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி கொடுக்கும் நாளாகவும் அமைந்துள்ளது.