உத்தராஞ்சல் சம்பர்க் க்ராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு இருக்கையில் நீட்டிக் கொண்டிருந்த ஆணி தனது பின்புறத்தை பதம் பார்த்துவிட்டதாக பயணி ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


ரயில் எண் 15036ல் சி2 கோச்சில் சீட் எண் 29ல் பயணித்த  முக்தார் அலி என்ற அந்தப் பயணி ரயில்வே சேவா என்ற ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக தனது புகாரை பதிவு செய்துள்ளார்.


அதில் அவர் இரண்டு இருக்கைகளுக்கு இடையே இருந்த ஹேண்டில் வெளியே துருத்திக் கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் அந்த பயணி உட்காரவே அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


அவரின் பதிவில் "இந்த கைப்பிடியைப் பாருங்கள், 15036 இருக்கை எண் 29 C2-ல் அமர்ந்திருந்த எனது உடலின் பின்பகுதி மற்றும் கால்சட்டை சேதமடைந்துள்ளது. தயவுசெய்து இதை சரிசெய்யவும், இது மிகவும் ஆபத்தானது" என்று ரயில்வே சேவாவை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார். 







இதுதொடர்பான அந்தப் பயணி முக்தார் அலியின் ட்வீட்டை கவனித்து ரயில்வே சேவா, "தயவுசெய்து உங்கள் PNR/UTS விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணைப் பகிரவும். DM வழியாகப் பகிரவும். அதனால் நாங்கள் புகாராகப் பதிவு செய்யலாம். உங்கள் கவலையை நேரடியாக https://railmadad.indianrailways.gov.in ல் தெரிவிக்கலாம் அல்லது விரைவான தீர்வுக்கு 139க்கு டயல் செய்யலாம். ," என்று தெரிவிக்கப்பட்டது.






இது சர்ச்சையான நிலையில் முக்தார் அலியின் புகார் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் இஸ்ஸாத்நகர் ரயில்வே பிரிவ மேலாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.


ரயில்வே சேவாவில் இதுபோன்ற புகார் வருவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே இதுபோல் உடைந்த ஜன்னல்கள், சுகாதாரமற்ற கழிவறைகள், சுத்தமில்லாத உணவு எனப் பல புகார்கள் வந்துள்ளன.


இந்தப் புகார் ரயில் பயணிகளின் சவுகரியத்திற்கு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை ரயில்வே துறைக்கு இன்னொருமுறை உணர்த்தியுள்ளது.