Parrot witness: கொலையாளியை காட்டிக் கொடுத்த கிளி.. 2 பேருக்கு ஆயுள் தண்டனை - சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்

உத்தர பிரசேகத்தில் 2014ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கிளி சாட்சி அளித்ததால் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Continues below advertisement

Parrot witness case : உத்தரபிரசேகத்தில் 2014ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கிளி சாட்சி அளித்ததால் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பெண் கொலை

உத்தர பிரசேத மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் விஜய் ஷர்மா. இவரது மனைவி நீலம் ஷர்மா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று, அதாவது பிப்ரவரி 2014 பிப்ரவரி 20ம் தேதி தனது 2 மகள்களுடன் விஜய் ஷர்மா ஒரு திருமணம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மனைவி நீலம் ஷர்மா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததோடு, அவரது வீட்டில் இருந்த நாயும் கொலை செய்யப்பட்டிருந்தது. இதனை அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வந்தனர். ஆனாலும் கொலையாளிகள் பற்றி எந்த தகவலும் தடயமும் கிடைக்கவில்லை.

பின்னர், நீலம் ஷர்மாவின், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்ட பெண் மீது 14 தாக்குதலும், நாய் மீது 9 தாக்குதல்களும் நடத்தப்பட்டது தெரிந்தது.  இதற்கிடையில் நிலம் ஷர்மா மர்ம முறையில் உயிரிழந்தது பற்றி அவரது மகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

கிளி சாட்சி

இந்நிலையில், விஜய் ஷர்மா வீட்டில் வளர்த்த வந்த அவரது செல்ல கிளி நீலம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சாப்பிடாமல் அமைதியாக இருந்துள்ளது. இதனை பார்த்த விஜய் ஷர்மா கொலையாளியை கிளி நேரில் பார்த்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டார். இதனால் அவர் சில நபர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கிளியிடம் கூறினார்.

அப்போது அவர் தனது மருமகன் ஆசு பெயரை கூறிய போது கிளி ஆவசமடைந்ததது. இதுபற்றி போலீசார் விஜய் சர்மா கூறினார். இதனை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

தீர்ப்பு

அப்போது கிளியின் முன்பு போலீசாருக்கு பல பெயர்களை கூறினார். அப்போது அந்த கிளி ஆசுவின் பெயரை கூறிய போது மட்டும் கத்தியது. இதனை அடுத்து, ஆசுவை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது ஆசு தனது நண்பர் ரோனியுடன் சேர்ந்த நீலம் ஷர்மாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 9 ஆண்டுகளாக பிறகு நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 14 சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் பெண்ணின் மருமகன்கள் அசுதோஷ் மற்றும் ரோனி மாசி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ரோனி மாசி மற்றும் அசுதோஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், தலா ரூ.72 ஆயிரம் அபராதம் விதித்தும் சிறப்பு நீதிபதி முகமது ரஷீப் திர்ப்பளித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola