எதிர்க்கட்சிகளின் தொடர் அமலியால் மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் கூடின. 12 மாநிலங்களவை  எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கையை மாநிலங்களவை  தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்ததால், பார்லிமென்ட் மேல்சபையில் மீண்டும் கடும் குழப்பம் ஏற்பட்டது. இதனிடையே மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


 






முன்னதாக, முதல் நாள், பண்ணை சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, 2021 நிறைவேற்றப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் மசோதா மீது விவாதம் கோரியதால், சபையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் 11-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான 12 மாநிலங்களவையின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் "கட்டுப்பாடற்ற மற்றும் வன்முறையான நடத்தைக்காக" குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரைப் புறக்கணிப்பது குறித்து காங்கிரஸ் மற்றும் 13 கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.


முன்னதாக, 12 எம்.பிக்களின் சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என மாநிலங்களவை அவைத்தலைவர்  வெங்கையா நாயுடு தெரிவித்திருந்தார்.


மாநிலங்களவையில் கடந்த கூட்டத் தொடரின் கடைசி நாளில் அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி நேற்று தாக்கல் செய்தார்.


குரல் வாக்கு மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டு, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆறு பேரையும், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளிலிருந்து தலா இரண்டு பேரையும், சிபிஐ சிபிஎம் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரையும், சஸ்பெண்ட் செய்வதற்கான உத்தரவை அவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் பிறப்பித்தார். நடப்பு கூட்டத் தொடரில், முந்தையக் கூட்டத்தொடர் அடிப்படையில் உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.     



இதையொட்டி, அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த  காங்கிரஸ் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண