நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்ட தொடரில் பல சட்டங்களுக்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 


நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிராயன் கேள்வி:


இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிராயன் மக்களவையில் பேசினார். அப்போது, மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு பல லட்சக்கணக்கான ரூபாயை ரத்து செய்துள்ளது. ஆனால், வெறும் 0.82 சதவீதம் பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். 


பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் மத்திய அரசு, கடன் பெற்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கடன்களை ரத்து செய்யும் என்ற கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளார். 


எனவே, என்னுடைய ஒரே ஒரு கேள்வி, கடன் பெற்று உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு கடன்களை ரத்து செய்ய முன்வருமா என அறிய விரும்புகிறேன் எனத் தெரிவித்தார். 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்:


அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரிய நிறுவனங்களுக்கு கடன்களை ரத்து செய்யவில்லை என தெரிவித்தார்.


அதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பொய்.. பொய்... என தெரிவித்தார். 


அதற்கு, அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொய் என்பது பாராளுமன்ற விதிகளுக்கு புறம்பான வார்த்தை எனத் தெரிவித்தார்.


பின்னர், பெரு நிறுவனங்களுக்கு கடன்கள் ரத்து செய்யப்படவில்லை என்றும், ரைட் ஆஃப் என்பது வேறு, ரத்து செய்வது என்பது வேறு, இங்கு யாருக்கும் ரைட் ஆஃப் செய்யவில்லை எனத் தெரிவித்தார். ரைட் ஆஃப் செய்யப்பட்டவர்களின் ஆதாரமான பத்திரங்களை கொண்டு, வசூல் செய்து கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார். 


 



மேலும், கல்வி கடன் தொடர்பாக கூறும் போது, இவங்க பணத்தை, எடுத்து கொடுத்தது போன்று உள்நோக்கத்துடன் பேசுவது சரியில்லை என தெரிவித்தார்.


கல்விக்கடனை ரத்து செய்வது தொடர்பாக பரிந்துரை வைக்கலாம், ஆனால், அந்த பணத்தை எடுத்து மாற்றி கொடுத்ததாக கூறுவது உள்நோக்கத்துடன் பேசுவது போன்றதாகும் என தெரிவித்தார்.


Also Read: Kerala: கேரளா: பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்..!


Also Read:இனி டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.. - நாடாளுமன்றத்தில் பதிலளித்த மத்திய அமைச்சர்!