பனாமா ஆவணங்கள் மோசடி வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற 5 மணி நேர அமாலாக்கத் துறையின் விசாரணையில், பிரபல இந்தி  நடிகை ஐஸ்வர்யா ராய் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துவிட்டார். உலகம் முழுவதிலும் உள்ள செல்வந்தர்கள் சட்டப்படி இல்லாமால் வெளிநாடுகளில் பதுக்கி வரும் சொத்துக்கள் தொடர்பாக பனாமாவைச் சேர்ந்த சட்டம் மற்றும் நிதி சேவை நிறுவனமான மொசாக் பொன்சேக்கா என்ற நிறுவனத்திலிருந்து 1.5 மில்லியன் இரகசிய ஆவணங்களைக் கசிய விடப்பட்டது. 


இதில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர் பட்டியலில் இடம்பெற்றனர். இதனையடுத்து,  பனாமா பேப்பர் கசிவுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க பலமுனை அமைப்புக்குழுவை மத்திய அரசு உருவாக்கியது. 


5 மணி நேரம் விசாரணை:  


பனாமா ஆவணங்கள் மோசடி வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. குறிப்பாக, கடந்த 2005ம் ஆண்டு, பிரித்தானிய  கன்னித் தீவுகள் மண்டலத்தில் ( British Virjin Islands - tax heaven Country வரியில்லா நாடு ) செயல்படும் Amic Partners Limited  நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றது, இந்திய ரிசர்வ் வங்கியின்  தாராளமயமாக்கப்பட்ட பண அனுப்புதல் திட்டத்தின் கீழ் தனது கணவர் அபிஷேக் பச்சனின் வெளிநாட்டு வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்தது போன்ற பல்வேறு கேள்விகளை அமலாக்கத் துறை எழுப்பியதாக கூறப்படுகிறது. 


 



Amic Partners Limited சான்றிதழ்


 


முன்னதாக, பிரிட்டிஷ் கன்னித் தீவுகள் மண்டல முகமை அதிகாரிகள் Amic Partners Limited நிறுவனம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி, விசராணை நடத்தினர். விசாரணை முடிவில் Amic நிறுவனம் தொடர்பான பனாமா ஆவணங்களையும் உறுதி படுத்தினர். இந்த ஆவணங்களில், நிறுவனத்தின் அடிப்படைச் சான்றிதழ் (Certificate of Incumbency), நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள், இயக்குனர்கள் குழுவின் கலந்துரையாடல் கூட்டங்களில் விவாதிக்கப் பட வேண்டிய விசயங்கள் (நிகழ்வு குறிப்பு -  Minutes of Meeting) தொடர்பான ஆவணங்களும் இருந்ததாக ஆங்கில நாளிதழான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னதாக தெரிவித்தது.  இந்த நிகழ்வு குறிப்பில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் கையெழுத்து இருந்தாதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


இருப்பினும், இன்றைய விசாரனையில் ஐஷ்வர்யா ராய் தன்மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துவிட்டதாக  அறியப்படுகிறது. தனது நிதி விவகாரங்களையும், மறைந்த தந்தை கிருஷ்ணா ராஜ் ராய் கவனித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளதாக  கூறப்படுகிறது. 


Aishwarya Rai| பனாமா பேப்பர் வழக்கு: ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை !