இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷணும், 107 பேருக்கு பத்ம ஸ்ரீயும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தின் 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் கட்டமாக சிலருக்கு பத்ம விருதுகளை வழங்கினார். அதன்படி இன்றை மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பி பாலசுப்ரமணியம் பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார். கலை மற்றும் இலக்கிய பிரிவில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ தளபதி பிபின் ராவத்திற்கும் இன்று பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
இவர்கள் தவிர காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் குலாம் நபி அசாத்திற்கும் பதம்பூஷண் விருது வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்த விருதுகள் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விருது 'தனித்துவமான பணியை'யை அங்கீகரிக்க முற்படுகிறது மற்றும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், பொது சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு இனம், வேலை, பதவி அல்லது பாலினம் என எந்த பாகுபாடின்றி அனைவரும் தகுதியானவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.
முன்னதாக, 2022 பத்ம விருதுகளுக்கான (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) ஆன்லைன் விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை மத்திய அரசு பெற்றது. அதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்