பெங்களூருவில் கடந்த வாரம் நடந்த பயங்கர விபத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அலங்கரிக்கப்பட்ட எருது ஒன்றை பெண்மணி ஒருவர் கயிற்றை பிடித்து அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார். அப்போது அந்த எருது திடீரென தன் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபரை ஆக்ரோஷமாக ஓடிச்சென்று முட்டுகிறது. இதில் அந்த நபர் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்து விடுகிறார்.
அந்த இருசக்கர வாகனத்தின் அருகே ஒரு லாரி சென்றுகொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டி கீழே விழுந்ததும், ஓட்டுநர் லாரியை நிறுத்தி விடுகிறார். இதனால் இரு சக்கர வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் நீச்சல் குளம் சந்திப்பு அருகே கடந்த வாரம் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. கடந்த வாரம் சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சி சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் திடீரென நடந்த நிலையில், இரு சக்கர வாகன ஓட்டி, தெருவில் நடந்து சென்ற பெண் மற்றும் லாரி ஓட்டுநர் மூவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த எருதை பெண் அழைத்துச் செல்லும் நிலையில், அதன் பொறுப்பாளர் உரிமையாளர் அவர்தானா? ஏன் பூம்பூம் மாடு தெருவில் சுற்றித்திரிந்தது? ஏன் அனுமதிக்கப்பட்டது? என்றும் தெரியவில்லை. லாரி ஓட்டுநர் கவனமாக செயல்பட்டதால், இருசக்கர வாகன ஓட்டி உயிர் தப்பினார். இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டு, நடுரோட்டில் விழுந்து கிடந்த இருசக்கர வாகன ஓட்டிக்கு உதவியுள்ளனர்.
மேலும் படிக்க