ஞாயிற்றுக் கிழமை லீவுக்கு சகுனியை இழுத்த ஊழியர்... வைரலாகும் லீவ் லெட்டர்!

எதிர்பாராதவிதமாக இந்த விசித்திரமான கடிதத்தை அவரது உயரதிகாரி நிராகரித்துவிட்டார். அவர் ராஜ்குமார் யாதவுக்கு பதில்மொழி கடிதத்தை எழுதினார்.

Continues below advertisement

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை பெரும்பாலும் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் மத்திய பிரதேச மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைக் கேட்டு விசித்திரமான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார் ஒரு அரசு ஊழியர். அந்த கடிதம் சமூக வலைதளங்களிலும்ம் வைரலாக பரவியது.

Continues below advertisement

அகர் மால்வா மாவட்டத்தில் துணை இஞ்சினியராக பணிபுரிபவர் ராஜ்குமார் யாதவ்.  தன்னுடைய உயர் அதிகாரிக்கு விடுமுறைக் கேட்டு விண்ணப்பம் எழுதியுள்ளார். அதில் தன்னுடைய கடந்த பிறவியின் வாழ்க்கையின் நினைவு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த பிறவியில் ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைஸியின் பால்யகால நண்பராக இருந்ததாகவும், அப்போது ஆர்எஸ்எஸ்சின் தலைவர் மோகன் பகவத் மகாபாரதத்தில் வரும் சகுனியாக இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Coal Shortage | நெருங்கும் பவர் கட்.. நிலக்கரி பற்றாக்குறையில் தவிக்கும் இந்தியா.. என்னதான் சிக்கல்!?

 "என்னுடைய போன பிறவி வாழ்க்கையை மேலும் அறிந்துக்கொள்ள பகவத் கீதையைப் படிக்க வேண்டும். என்னுடைய ஈகோவை அழித்தொழிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிச்சையெடுக்க வேண்டும். அது என் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் எனக்கு விடுமுறை வேண்டும் என அந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த விசித்திரமான கடிதத்தை அவரது உயரதிகாரி நிராகரித்துவிட்டார். அவர் ராஜ்குமார் யாதவுக்கு பதில்மொழி கடிதத்தை எழுதினார். அதில், “இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நீங்கள் அலுவலகத்துக்கு வரவேண்டும், அதுதான் உங்கள் ஈகோவை அழித்தொழிக்கும்” என பதிலளித்துள்ளார்.

Coal shortage | மின் பற்றாக்குறை.. பீக் நேரங்களில் ஏ.சி. வேண்டாம்.. பொதுமக்களுக்கு திடீர் உத்தரவு!

அந்தக் கடிதத்தில், 


 “அன்புள்ள துணைப் பொறியாளரே, நீங்கள் உங்கள் ஈகோவை அழிக்க விரும்புகிறீர்கள், இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். உங்களின் இந்த நோக்கத்திற்காக, எங்கள் ஒத்துழைப்பு உங்கள் இலக்கை அடைய உதவும். ஒரு நபர் தன்னுடைய ஞாயிற்றுக்கிழமையை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என ஈகோவுடன் இருக்கலாம். அந்த ஈகோவை அதன் வேர்களிலிருந்து அழிப்பது ஒருவரின் முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாதது. ஆகையால், ஆன்மீக முன்னேற்றத்திற்கான உங்கள் விருப்பத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீங்கள் வேலை செய்ய உத்தரவிடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola