மிக்ஜாம் புயல்:


மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முழுவதும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னையில், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த புயல் இன்று ஆந்திராவில் கரையை கடந்தது.



இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக விசாகபட்டிணம் விமானநிலையத்தில் இருந்து செல்லும் 23 விமானங்கள் இன்று (டிசம்பர் 5) ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 


ரத்து செய்யப்பட்ட விமான சேவை:


ஹைதராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு, விஜயவாடா, திருப்பதி மற்றும் சென்னை போன்ற இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பான அப்டேட்களுக்கு விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



அவசரகால சேவைகளுக்காக விமான நிலையம் இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இப்பகுதியில் மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும், கடலோரப் பகுதிகளில் 1 முதல் 1.5 மீட்டர் வரை அலைகள் எழக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், சென்னை விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.