டெல்லி மெட்ரோ ரயிலில் ஆண் மற்றும் பெண் இருவர் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் அருகில் இருக்கும் இளைஞரை தொடர்ந்து தாக்கிக் கொண்டே வருகிறார். கூடவே உன்னை அம்மாவிடம் சொல்கிறேன், உன்னைப் போன்ற ஆள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று திட்டியபடியே நினைத்து நினைத்து அந்த இளைஞரை அடிக்கிறார். இறுதியாக அந்த இளைஞர் பெண்ணை ஒரு அடி அடிக்கிறார். பின்னர் இருவரும் மெட்ரோ ரயிலில் இருந்து இறங்கிச் செல்கின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை சுமார் 2.86 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 4950 பேர் லைக் செய்துள்ளதோடு இந்த வீடியோவிற்கு 400க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் இளைஞரை அடிப்பதற்கு காரணம் “இந்த டீஷர்ட்டை 1000 ரூபாய்க்கு ஸாராவில் வாங்கினேன்” என்று அந்த பெண் சொல்ல, “இதை பார்ப்பதற்கு 150 ரூபாய்க்கு மேல் மதிப்பு இல்லை என்பது போலத் தெரிகிறது” என்று அந்த இளைஞர் சொன்னதற்காக தான் விழுந்த அடி எல்லாமே. எனினும் அடிவாங்கிய அந்த இளைஞருக்கு ஆதரவாக பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
டாக்டர் ப்ரதிஸ்தா ப்ரம்மா என்பவர் “சமூகத்தில் ஒரு கெட்ட சிந்தனை பரவி வருகிறது. ஒரு பெண் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒரு ஆணால் செய்ய முடியாது.. கொடூரமான பெண்ணியம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஹுல்லாபலூ என்பவர் “அந்த இளைஞர் ஐபிசி 354 விதியின் கீழ் புகார் பதியப்படலாம். ஆனால் அந்த இளைஞரைத் தாக்கும் பெண்ணிடமிருந்து காப்பாற்ற ஆணுக்கு எந்த சட்டமும் இல்லை. வன்முறை இரண்டு பக்கமும் இருந்தாலும், ஆண் தான் பாதிக்கப்படுவான். இந்தியாவில் நாணம் என்பது பெண்களுக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கு நாணம் இல்லை. பாலின பேதம் உள்ள சட்டங்கள்” என்று கூறியுள்ளார்.
இதுவே அமெரிக்காவாக இருந்திருந்தால் அந்த பெண் கைது செய்யப்பட்டிருப்பாள். ஆனால் இந்தியாவில் அந்த வாய்ப்பு இல்லை. பொது இடத்தில் ஆண்களை அடிப்பதற்கு இந்திய பெண்களுக்கு தயக்கமே இருப்பதில்லை” என்று பாரதிய மென் என்ற நபர் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞர் அமைதியாக இருக்கிறார் ஏனெனில் அங்குள்ள கூட்டமும், அமைப்பும் பெண்ணுக்கு ஆதரவாக இருக்கிறது.. அந்த இளைஞர் பாதுகாப்பாகவும், டீசண்ட்டாகவும் நடந்து கொள்கிறார். அந்த பெண் அடிக்கவும் செய்கிறார்.. திட்டவும் செய்கிறார்.. “ என்று சர்கார் ஃபையர்ஸ் என்ற நபர் கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த சண்டை முன்பே திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது. இரண்டு பேரும் யூடியூபர்ஸ் என்றும், க்ரிஷ்ணவ் ஹங்க் 2.0 என்ற தங்களது யூடியூப் சேனலில் இது போன்ற ப்ராங்குகளை பதிவேற்றம் செய்துவருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. பொது இடங்களில் இதுபோன்று அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.