கேரளாவில் அதிகளவு வைரக்கற்கள் பதித்து  மோதிரம் உருவாக்கப்பட்ட நிகழ்வு வைரலாகி வருகிறது. 


பொதுவாக ஆபரணங்களை விரும்பாத மக்கள் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை. தங்கம், வெள்ளி, வைரம் என விதவிதமாக உள்ள ஆபரணங்களுக்கென தனித்தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதேசமயம் இதே ஆபரணங்களை கொண்டு தினம் தினம் விதவிதமான சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தங்கத்தை வைத்து பல சிறப்பான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.


ஆனால் வைரத்தை வைத்து செய்யப்படும் சாதனைகள் என்பது மிகக்குறைவு தான். பார்த்தவுடன் கண்களை கவரும் வைரம் விலை அதிகம், பிற்கால பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சாமானிய மக்கள் பெரிதாக அதில் நாட்டம் காட்டுவதில்லை. ஆனால் அதே வைரத்தை கொண்டு கேரளாவைச் சேர்ந்த நகை நிறுவனம் ஒன்று உலக சாதனைப் படைத்துள்ளது. அம்மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி ஆபரண தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான SWA டயமண்ட் நிறுவனம் தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள். 






மலப்புரம் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மோதிரம் இளஞ்சிவப்பு சிப்பி காளான் வடிவத்தை போன்று உள்ளது. இந்த  மோதிரம் 24,679 வைரங்களுடன் பிரகாசிக்கிறது.'தி டச் ஆஃப் அமி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மோதிரத்தை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில் முதுகலை பட்டம் பெற்ற ரிஜிஷா என்பவர் தான் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளார். இதன்மூலம்  12,638 வைரங்கள் அடங்கிய அதிகளவு வைரங்கள் கொண்ட மோதிரம் என்ற முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 




இந்த சாதனை மோதிரத்தை உருவாக்க 90 நாட்கள் தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தி டச் ஆஃப் அமி' நமது மாநிலத்தின் வைரத் துறையில் தொழில்முனைவோரின் வெற்றியைக் குறிப்பதாக SWA டயமண்ட்ஸின் நிறுவனம் அப்துல் கபூர் அனாதியான் தெரிவித்துள்ளார். மேலும் மிகக் குறைவான நகை உற்பத்தி நிறுவனங்களை கொண்ட கேரளாவில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உலகளவில் வைரத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் பெல்ஜியம் போன்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண