இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை தேவைகளுடன் வறுமையை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார். 


மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய நரேந்திர மோடி, “நாட்டின் வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ததன் மூலம் இந்திய பொருளாதாரம் மூன்றவாது இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கம் உள்ளது. அரசியல் சாசனமே எங்களுக்கு வழிக்காட்டியாக இருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க பாடுபடுவோம்.கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட சவாலாம காலங்களிலும் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். 


குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் மோடி பேசுகையில், “ குடியரசுத் தலைவரின் உரை ஊக்கமளிப்பதாகவும் உண்மையின் பாதியை வழிநடத்துவதாக இருந்தது,” என்று குறிப்பிட்டார். 


தேர்தல் காலம் - மக்களின்  அறிவுத்தன்மை 


2024 மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்து அவர் குறிப்பிடுகையில்,” சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பா.ஜ.க. விற்கு மக்கள் மூன்றாவது முறையாக வாய்ப்பு அளித்துள்ளார்கள். பத்தாண்டுகள் ஆட்சியல் இருந்த ஒரு அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது. இது சாதாரண விசயம் அல்ல. ஆனால்,சிலர் மக்களின் முடிவை ஏற்றுகொள்ள மறுக்கின்றனர்.” என்று காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்டார். 


” நாட்டு மக்களின் அறிவை கண்டு பெருமை கொள்கிறேன். தேர்தல் காலத்தில் மக்களின் முடிவு எதை காட்டுகிறது என்றால், அவர்கள் வெறும் பரப்புரையை நிராகரித்து விட்டனர். செயலுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். நம்பிக்கைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.” என்று காங்கிரஸ் ஆட்சிக்கு வராதது பற்றி குறிப்பிட்டுள்ளார். 


எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுப்பு:


மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதற்கு பதிலளிக்க எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனால், எதிர்க்கட்சியனர் பிரதமர் மோடி பேசும்போது 'LoP ko bolne do' என்று முழக்கமிட்டு அவையை விட்டு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 


பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முறையை குறிப்பிட்டு பேசினார். அவர் குறிப்பிடுகையில்,” காங்கிரஸ் கட்சியனர் ஆட்சி செய்கையில் auto pilot, remote pilot என்ற முறையில் ஆட்சி செய்தனர். அவர்கள் செயலாற்றுவதில் நம்பிக்கையற்றவராக இருந்தனர்.”என்று சோனியா காந்தியை மறைமுகமாக விமர்சித்தார். அதாவது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அவரை சோனியா காந்தி வழிநடத்தினார் என்று சோனியா காந்தியை பிரதமர் மோடி விமர்சித்தார். இதற்கு கருத்து தெரிவிக்க முனைந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சில எம்.பி.க்கள் முழக்கமிட்டு அவையை விட்டு வெளியேறினர். 


நாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் அரசு போராடும் என்று நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசினார். 


மாநிலங்களவையில்  பிரதமர் நரேந்திர மோடி உரையின் சில முக்கிய பகுதிகள்:



  • நாட்டு மக்களின் அறிவுக்கூர்மை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். 

  • மக்கள் எங்களுக்கு மூன்றவாது முறையாக வாக்களித்துள்ளனர். மக்கள் இனி விக்‌ஷ்த் பாரத் (Viksit Bharat), ஆத்மநிர்பார் (Atmanirbhar Bharat) ஆகியவற்றின் செயல்பாட்டை காண்பர். நாடு வேகமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகால அனுபவங்களில் இருந்து இனி வரும் ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி மேம்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார். 

  • காங்கிரஸ் பா.ஜ.க.வின் வெற்றியை விமர்சித்ததற்கு பதில் அளித்துள்ளார். “ பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு எனது நன்றி. 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தோம். இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது எங்களுக்கு. இனியும் வெற்றியுடன் ஆட்சி செய்வோம் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார். 

  • கடந்த 10 ஆண்டுகளைவிட அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் அசுர வளர்ச்சி பெறும். 

  • இந்தியா உலகின் மூன்றவது பெரிய பொருளாதாரமாக உயரும்போது அதை நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரதிபலிக்கும்.