கோடை காலத்தை முன்னிட்டு, இனி அரை நாள் மட்டுமே பள்ளி வகுப்புகள் நடத்தப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. 


கோடைக் காலம் தொடங்கியதால், வெயில் சுட்டெரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாகப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால்,மாநில அரசுகள் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. 


இந்நிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல் இழப்பைத் தவிர்க்க பள்ளிகள் திறக்கப்பட்டு, தொடர்ச்சியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


இந்த சூழலில் கடுமையான வெயில் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இனி அரை நாள் மட்டுமே பள்ளி வகுப்புகள் நடத்தப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. 


இதுகுறித்து அம்மாநிலப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து பிராந்திய இணை இயக்குநர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:



''இனி நாளை (மார்ச் 15) முதல் பள்ளி கல்வி ஆண்டின் (2021- 22) இறுதி வேலை நாள் வரை அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்.  அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுபொருந்தும். 


அதன்படி, காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் இயங்கும். 12.30 மணிக்கு பள்ளியில் மதிய உணவு வழங்கப்படும். அதே நேரத்தில் 10 மற்றும் எஸ்எஸ்சி பொதுத்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் தொடரும். 






அனைத்து பிராந்திய இணை இயக்குநர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து வகையான பள்ளிகளிலும் இதை அமல்படுத்தி, கண்காணிப்பை அமல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது''. 


இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண