தேனிலவு இரவில் கணவன் தனது புது மணப்பெண்ணுக்கு செய்த ஒரு மூர்க்கத்தனமான சபதம் தாம்பத்திய வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. ஜாம்ஷெட்பூர் நகரில் கணவர் ஒருவர் தனது மனைவியிடம் முதலிரவில் தனக்குள் ஒரு நீண்டகால ஆசை இருந்ததாக தெரிவித்த சம்பவம் சூர்யவம்சம் திரைப்பட பாணியில் அரங்கேறியுள்ளது.


பொட்கா கிராமத்தில் வசிக்கும் பல்லவி என்பவர் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஜெய்மால் மண்டல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எம்பிஏ பட்டம் பெற்ற ஜெய்மால் மண்டல் வங்கி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். தனது மனைவியாக இருக்க ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் எனவும், 2 ஆண்டுகளுக்குள் ஐஏஎஸ் அதிகாரியானால்தான் நமக்குள் முதலிரவு நடக்கும் என்ற வினோதமான நிபந்தனையை தேனிலவு இரவில் தனது மனைவியிடம் முன்வைத்தார். 


மேலும் படிக்க :Anil Menon | நிலவுக்கு செல்லும் அடுத்த இந்திய வம்சாவளி வீரர்... யார் இந்த அனில் மேனன்?


முதலில் இதைக்கேட்ட பல்லவிக்கு சிரிப்பு வந்துள்ளது. மறுநாள் காலையில் தனக்கு நேர்காணல் இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்ற ஜெயமால் திரும்பி தன்னிடம் நெருங்கவில்லை. ஒருமுறை கூட கணவர் தன்னை பெயர் சொல்லிக்கூட அழைக்கவில்லை என்றும், தான் பேச முயன்ற போதெல்லாம் மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எங்கே இதை வெளியே சொன்னால் குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்படுமோ என்று எண்ணி எல்லோரிடமிருந்தும் பிரச்சனையை மறைத்துள்ளார். 


தொடர்ந்து, இதுபோலவே நாட்கள் நகர பொறுமையிழந்த அந்த பெண் தனது மாமியாரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு நாளுக்கு நாள் மாமியார் கொடுமை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தனது வீட்டிற்கு சென்ற பல்லவி தனது தந்தையிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி கிழக்கு சிங்பூமில் உள்ள பொட்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது,  நீதிமன்றம் தனக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கையில் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களை சுற்றி வருவதாக கூறப்படுகிறது. 


Petrol, Diesel Price: 34 வது நாளாக ஒரே விலை.. இன்றும் மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Watch Video: ஆஷஸ் டெஸ்ட் தொடங்கியதும் சாதனை... 85 ஆண்டுகளுக்குப் பின் முதல் பந்தில் விக்கெட்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண