சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவின் முதல் பிரதமரானார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பதவியில் இருந்த நேரு, 1964ம் ஆண்டு இதே நாளில் (மே 27ம் தேதி) மாரடைப்பால் உயிரிழந்தார். நேருவுக்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவி ஏற்று கொண்டார். 


பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீதான அவரது காட்டிய அளவுக்கு அதிகமான அன்பின் காரணமாக, நேரு செல்லமாக நேரு மாமா என்று அழைக்கப்பட்டார்.


நேருவின் பிறப்பு, குடும்பம்:


ஜவஹர்லால் நேரு தனது 74வது வயதில் 1964ம் ஆண்டு இதே நாளில் காலாமானார். இதையடுத்து இந்த நாள் இவரது நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. பண்டித நேரு அலகாபாத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1880ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி பிறந்தார். இவரது தந்தியின் பெயர் மோதிலால் நேரு மற்றும் தாயார் பெயர் ஸ்வரூபராணி. நேருவின் தந்தை தொழில் ரீதியா ஒரு வழக்கறிஞர் ஆவார். 


கல்வி: 


நேரு, இங்கிலாந்தில் உள்ள ஹாரோவில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்பை லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் முடித்தார். பின்னர் சட்டப் பட்டப்படிப்புக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். தொடர்ந்து, நேரு 1912ம் ஆண்டு பார்-அட்-லா என்ற பட்டத்தை பெற்றார். காந்திஜியின் தாக்கத்தால் 1912ல் காங்கிரஸில் இணைந்த நேரு, அதன்பின் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. 


நேரு கிரிக்கெட் விளையாடிய வீடியோ காட்சிகள்: 






நேரு எப்படி இறந்தார்.? 


ஜனவரி 1964ம் ஆண்டு மே26ம் தேதி காலையில் நேரு புவனேஷ்வர் சென்றிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கமாறு அறிவுறுத்தினர். நேரு தனது உடல்நிலை காரணமாக டெல்லி திரும்பியதும், இரவு 8 மணிக்கு நேராக தனது அறைக்கு சென்று மருந்து அருந்திவிட்டு படுக்கையில் படுத்தார். 


மே 26 இரவு முதல் மே 27ம் தேதி அதிகாலை வரை நேருவுக்கு கடுமையான முதுகுவலி காரணமாக தூக்கம் வரவில்லை. தொடர்ந்து மே 27ம் தேதி காலை 6.30 மணியளவில், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது, அதை தொடர்ந்து மாரடைப்பும் வந்தது. 


நேருவின் மகள் இந்திரா காந்தியின் அவசர அழைப்பின் பேரில், மருத்துவர்கள் அவ்விடத்திற்கு வந்து நேருவைக் காப்பாற்ற முயன்றனர். 8 மணி நேரம் கோமா நிலையில் இருந்த அவரைக் காப்பாற்ற முடியவில்லை.


27 மே 1964 அன்று மதியம் 2:05 மணிக்கு வானொலியில் பண்டித நேரு காலமானார் என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் பிரதமர் இல்லத்திற்கு வெளியே லட்சக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் தலைவருக்கு பிரியாவிடை அளித்தனர். தொடர்ந்து, நேருவின் இறுதிச் சடங்குகள் மே 29 அன்று நடைபெற்றது.