கர்நாடகா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு கோவிட்-19 லிருந்து உருமாற்றம் பெற்ற ஒமிக்ரான் வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒமிக்ரான் தொற்று பரவலின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், ஆந்திரா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும்,ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருமே தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
ஒமிர்கான் கண்டறியப்பட்ட மாநிலங்கள் | தொற்று எண்ணிக்கை | குணமடைந்தோர் எண்ணிக்கை |
மகாராஷ்டிரா | 17 | 6 |
ராஜஸ்தான் | 9 | 9 |
குஜராத் | 3 | - |
கர்நாடகா | 3 | - |
டெல்லி | 2 | - |
ஆந்திரா | 1 | - |
சண்டிகர் | 1 | - |
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, மத்திய சுதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷஸ் மாநிலங்களின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "எந்தவொரு மாவட்டத்திலும் நோய் தொற்று பரவல் அதிகரித்தால் அப்பகுதியை கட்டுப்படுத்துதல் பகுதியாக அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த இரண்டு வாரங்களில் மிசோரம் கேரளா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள எட்டு மாவட்டங்களில் நோய் தொற்று பரவம் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. ஏழு மாநிலங்களில் உள்ள 19 மாவட்டங்களில் ஐந்து முதல், பத்து ஈதவீதம் வரை நோய்த் தொற்று உள்ளது.
எனவே, பத்து சதவீதத்திற்கும் அதிகமாக நோய் தொற்று பரவல் காணப்படும் இடங்களில் இரவு நேர கட்டுப்பாடு, மக்கள் கூடுவதற்கு தடை விதித்தல், திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதற்கு கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று ராஜேவஷ் பூஷன் அக்கடிதத்தில் குறிப்பிட்டார் .
இதற்கிடையே, ஒமிக்ரான் தொற்று பாதிப்பை இரண்டு மணி நேரத்திற்குள் கண்டறிவதற்கான சாதனத்தை இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரில் உள்ள மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் பிஸ்வஜித் போர்காகோட்டி தலைமையிலான குழு இதனை கண்டுபிடித்துள்ளது.
இதற்கு முன்னர், ஓமிக்ரான் தொற்றை உறுதி செய்வதற்கு குறைந்தது 36 மணிநேரம் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்