முரண்பாடுகளுக்கு எதிராக, தடைகளுக்கு எதிராக வெற்றி பெறுவதுதான் உலகின் சிறந்த உணர்வு. உத்தரகாண்ட்டில் சிறிய டவுனை சேர்ந்த ஒரு இளைஞர் அதனை செய்துள்ளார். ரோஹித் நேகி என்னும் இளைஞர் தற்போது கவுகாத்தி ஐஐடியில் இரண்டாம் ஆண்டு எம்டெக் மாணவராக உள்ளார், இந்நிலையில் படித்துக்கொண்டிருக்கும்போதே உபெர் நிறுவனத்திடமிருந்து மாபெரும் சலுகையைப் பெற்றுள்ளார். உத்தரகாண்டின் கோட்வாரைச் சேர்ந்த 22 வயது இளைஞன் உபெர் நிறுவனத்திடமிருந்து ரூ.2.05 கோடி சம்பளத்திற்கான வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார். அவர் முதுகலைப் படிப்பை முடித்த பிறகு உபெர் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிவார் என்று கூறப்படுகிறது. அவரது அடிப்படை சம்பளம் ரூ.96 லட்சமாகவும், சிடிசி ரூ.2.05 கோடியாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட்டப்பதற்கு எளிதாக இருந்தாலும், விவசாயியின் மகனான ரோஹித்துக்கு இது போன்ற வேலை எளிதாக கிடைக்கவில்லை, அவனது பெற்றோர்கள் தங்கள் மகனுக்குத் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் கொடுக்க முயன்றனர், இதனால் அவன் அடையவும் அவனது கனவுகளை நிறைவேற்றவும் முடிந்தது. “நான் கீழ் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது குடும்பத்தின் மாதச் செலவு 10,000 ரூபாய்க்கும் குறைவு. என் தந்தை ஒரு விவசாயி, என் அம்மா ஒரு இல்லத்தரசி. என் சகோதரி ஒரு செவிலியர். 2.05 கோடி ரூபாய் பேக்கேஜ் என்பது எனது குடும்பத்திற்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான உணர்வு. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியா
பள்ளிக்குப் பிறகு நேகி உத்தரகாண்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார், ஆனால் பட்டப்படிப்பின் போது நல்ல மதிப்பெண்களைப் பெறவில்லை. ஆனாலும், அவர் கடினமாகப் படித்து, கேட் தேர்வில் நல்ல ரேங்க் பெற்று ஐஐடி கவுகாத்திக்கு சென்றார். சமீபத்திய செய்திகளின்படி, கோட்வார் டவுன்ஷிப் வரலாற்றில் யாருக்கும் வழங்கப்படாத மிகப் பெரிய சம்பளப் பேக்கேஜ் கொடுத்து நேகியை வேலைக்கு எடுத்துள்ளது அந்நிறுவனம். சர்வதேச நிறுவனத்திற்கான அவரது கேம்பஸ் இண்டர்வ்யூ தேர்வுக் குழுவிலிருந்து முதல் நாளிலேயே தேர்ச்சி அடைந்தார் என்று பேராசிரியர் டாக்டர் அபிஷேக் கூறினார். கோட்வார் பவரின் ராம்தயல்பூர் கிராமம் முழுவதும் ரோஹித் நேகியின் இந்த சிறப்பான சாதனையை அனைவரும் பாராட்டி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கல்வி மனிதனை எந்த உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு ஒரு உண்மையான உதாரணம் ரோஹித் நேகி.