‘ஸ்வர்னிம் விஜய் பர்வ்’ நிகழ்ச்சியில் மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.


டெல்லியில் உள்ள இந்தியா கேட் புல்வெளியில் 'ஸ்வர்னிம் விஜய் பர்வ்' இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட செய்தியில், ஜெனரல் பிபின் ராவத் இந்திய இராணுவத்தின் துணிச்சலான வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


“ஸ்வர்னிம் விஜய் பர்வ் விழாவில், இந்திய ராணுவத்தின் துணிச்சலான ஜவான்களை நான் வாழ்த்துகிறேன். நாங்கள் 'ஸ்வர்னிம் விஜய் பர்வ்' கொண்டாடுகிறோம். 1971 போரில் இந்தியாவின் 50 ஆண்டு வெற்றியை நினைவுகூரும் வகையில், இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், நான் துணிச்சலானவர்களை நினைவு கூர்கிறேன், அவர்களின் தியாகங்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.  'விஜய் பர்வ்' கொண்டாட்டத்தில் பங்கேற்க அனைத்து குடிமக்களையும் நாங்கள் அழைக்கிறோம்" என்று  கூறினார் பிபின் ராவத்


இதனைத்தொடர்ந்து,  பிபின் ராவத், அடுத்த நாள் (டிசம்பர் 8) தமிழ்நாட்டின் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






இதற்கிடையில், 'ஸ்வர்னிம் விஜய் பர்வ்' தொடக்க விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மின் ராஜ்நாத் சிங் கூறியதாவது, ”ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப்படை வீரர்களின் மறைவை அடுத்து, 'ஸ்வர்னிம் விஜய் பர்வ்' விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளோம். இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். 1971 போரில் இந்தியா வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரரின் வீரம் மற்றும் தியாகத்திற்கு இன்று நான் தலைவணங்குகிறேன். அவர்களின் தியாகத்திற்கு நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்"  என்று பேசினார்.


மேலும் பார்க்க..



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண