அரியவகை உயிரினமாக கருதப்படும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஒடிசாவின் ரிஷிகுல்யா கடற்கரையில் ( Rushikulya beach ) முட்டையிடுதற்காக வந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆபூர்வமானது. உலக அளவில் அதிகமாக இருக்கும் ஆமைகள். இவை ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக் கூடியவை. மணற்பரப்பு அதிகமுள்ள கடற்கடை பகுதிகளில் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அப்படி, ஒடிசாவின் புவனேஷ்வர் பகுதியில் உள்ள ரிஷிகுல்யா கடற்கரையில் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும். இவற்றை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினரும், தன்னார்வலர்களும் முட்டைகளை சேமித்து வைப்பர். இயற்கையாக முட்டையிலிருந்து 45 நாட்களுக்கு பிறகு குட்டி ஆலிவ் ரிட்லி ஆமைகள் வெளிவரும். பின்னர், கடலை நோக்கி செல்லும். ஆனால், இன்றைய காலங்களில் கடற்கரை பகுதிகளில் நவீனமயமாக்கல், மக்கள் அதிகம் கூடுவது உள்ளிட்ட காரணங்கள் குட்டி ஆமைகள் வழிமாறி கடலை நோக்கி செல்லாமல் வேறுபக்கமாக செல்லும். தன்னார்வலர்கள் அவற்றை பிடித்து கடலில் விடுவர்.
மேலும், சில மாநிலங்களில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இனத்தை பாதுகாக்க வனத்துறை சார்பில் ஆமை குஞ்சு பொறிக்கும் மையங்களும் அமைப்பட்டுள்ளன. கடற்கரை பகுதியில் இருந்து முட்டைகள் சேகரிக்கப்படும். பின்னர், கடலில் விடப்படும்.
ஆலிவ் ரிட்லி ஆமைகள் - ஒடிசா :
ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வருவது நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடக்கும் என்றும் இது ஏப்ரல் அல்லது மே மாதம் வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஆமைகளின் வருகை தாமதமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம், ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஜனவரி மாதத்தில் தொடங்கி பிப்ரவர் மாத தொடக்கத்தில் வருவதாக மாறியிருக்கிறது. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம் பட்டியலில் உள்ள ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கடற்கரை பகுதிகளையே முட்டையிட தேர்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆலிவ் ரிட்லி ஆமை சுமார் 100 முதல் 110 முட்டைகள் வரை இடும். ஆலிவ் ரிட்லி ஆமைகள் பெரும்பாலும் ஆழ்கடலில் வசிப்பவை. முட்டையிடுவதற்காக 5 முதல் 7 நாட்கள் வரை கடற்கரைக்கு வந்துபோகும்.
இந்திய வனதுறை அதிகார் டிவீட்
ஒடிசா கடறகரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட வந்துள்ளது குறித்து சுஷாந்த் நந்தா வீடியோ ஒன்றை டிவீட் செய்துள்ளார். அதில், "ஒடிசா தங்களது விருந்தினர்களை வரவேற்கிறது. ரிஷிகுல்யா கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டையிடும் காலம் தொடங்கிவிட்டது. இந்த முறையும் பகலில் நடைபெறுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆண்களுக்கு பிறகு, ஒடிசா ரிஷிகுல்யா கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட வந்துள்ளன. பொதுவாகம் இரவு நேரங்களில் கடலிலிருந்து வெளியே வரும் ஆமைகள், கடந்த சில் ஆண்டுகளைப் போலவே இம்முறையும் பகலில் முட்டையிட ஆமைகள் கடற்கரைக்கு வந்துள்ளனர். மணலை தோண்டி அதில் முட்டையிட்டு செல்லும். ஒரு நெஸ்டில் 80 முதல் 100 ஆமை முட்டைகள் இருக்கும்.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துவருகின்றனர். ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்து தருவது நம் கடமை என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.