ஒடிசா பாலசோர் மாவட்டம்:


ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகனான தேவ்குமமாருக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. திருமணத்திற்காக ரெமு கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.


மணப்பெண் எதிர்ப்பு:


திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி கொண்டிருந்தன. அப்போது மணப்பெண், தனது கையிலுள்ள வளையல்களை கழற்றி தூக்கி எறிந்தார். மேலும் தனக்கு திருமணத்திற்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார். மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது நடத்தையை எதிர்த்த போதிலும், அவரது விருப்பத்திற்கு எதிராக திருமணம் நடத்தப்படுவதாக கூறி, அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்


மணமகன் மயக்கம்:


மணப்பெண் வளையல்களை தூக்கி எரிவதை பார்த்த மணமகன், உடனே மயக்கம் அடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள், முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பினர்.


வீடியோ வைரல்:


இச்சம்பவம் மே மாதம் 13ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்பட்டாலும், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






 


அடுத்த நாளே மணமகனுக்கு திருமணம்:


இந்நிலையில் அடுத்த நாளே, மணமகனுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம்  நடைபெற்றதாக கூறப்படுகிறது. 


Also Read:13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததால்  ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம் நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண