பெண்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.5 கட்டணத்தில் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிமுகப்படுத்தியுள்ளார்.






ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மலிவு விலை கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவையை முதல் கட்டமாக ஒடிசாவில் கோரபுத் மாவட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார். முதல் கட்டமாக ஆறு மாவட்டங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார். Location Accessible Multimodal Initiative (LAccMI) கீழ், மாநில அரசு ரூ.3,178 கோடி பட்ஜெட்டில் கிராமப்புறங்களில் 1,623 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, ஆறு மாவட்டங்களில் உள்ள 1,131 பஞ்சாயத்துகளில் 63 லட்சம் பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, மல்கங்கிரி, நபரங்பூர், ராயகடா, கலஹண்டி மற்றும் கஜபதி மாவட்டங்களில் இந்த சேவைகள் தொடங்கப்பட்டன.  






இம்முயற்சியின் கீழ், பெண்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கிராம பஞ்சாயத்துகளில் இருந்து தலைமையகத்திற்கு 5 ரூபாய் செலுத்தி பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். காணொலி காட்சி மூலம் பேசிய முதலமைச்சர் நவீன் பட்நாயக், ​​63 அதிநவீன பேருந்துகள் மாவட்டத்தின் 234 பஞ்சாயத்துகளை இணைக்கும், 13 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று பட்நாயக் கூறினார்.