தேசிய பங்குச்சந்தை பரிமாற்ற நிறுவன முன்னாள் சி.இ.ஓ.வான சித்ரா சுப்ரமணியனம், முன்னாள் குழு இயக்க அதிகாரியும், சித்ரா சுப்பிரமணியத்தின் ஆலோசகருமான ஆனந்த் சுப்ரமணியமும் முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.


இந்த நிலையில், ஆனந்த் சுப்ரமணியம் ஜாமீன் கோரிய வழக்கு நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆனந்த் சுப்பிரமணியன் வெளிநாடு தப்பிச்செல்லும் அபாயம் உள்ளது. அதனால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.


அப்போது, 2018ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடைபெற்று வருவதை காட்டி பேசிய நீதிபதி, கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் பறந்துபோகவில்லை என்றார். பின்னர், மீண்டும் பேசிய சி.பி.ஐ. வழக்கறிஞர், ஆனந்த் சுப்பிரமணியன்தான் அந்த இமயமலை யோகியாக இருக்க முடியும். அவர்தான் அனைத்து மின்னஞ்சல்களையும் இயக்கியிருக்க வேண்டும் என்று வாதிட்டார்.


அப்போது, வாதிட்ட ஆனந்த் சுப்பிரமணியனின் வழக்கறிஞர் அர்ஷ்தீப் 2010 மற்றும் 2014க்கு இடையிலே மோசடி நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் 2013லே இந்த வழக்கில் இணைந்ததாகவும் கூறினார். மேலும்,. இந்த வழக்கில் அவருக்கு எதிராக இரண்டு செபியின் உள் விசாரணைகளிலும் எதுவுமே கண்டறியப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.




அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் சுப்பிரமணியன் வழக்கறிஞரிடம், “ நீங்கள்தான் இமயமலை யோகி. தெய்வீக சக்திகளுடன் இமயமலையில் உயரமான பகுதிகளில் வாழ்கிறீர். சி.பி.ஐ. நான்கு ஆண்டுகளாக உறக்க நிலையில் இருந்தது. அவர்கள் திடீரென்று இப்போது எழுந்தார்கள். ஏன் என்று தெரியவில்லை? “ இவ்வாறு நீதிபதி கூறினார்.


அப்போது, நீதிபதிக்கு பதிலளித்த ஆனந்த் சுப்பிரமணியனின் வழக்கறிஞர் நான் இமயமலை யோகி இல்லை என்றார்.. அதேசமயம் சி.பி.ஐ. வழக்கறிஞர் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபணை தெரிவித்தார். இதுவரை 832 ஜி.பி. தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சில டேட்டாக்கள் அழிந்துள்ளதாகவும் கூறினர்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்கும் இந்த வழக்கை மார்ச் 24-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண