ஒரே நேர்கோட்டில் சூரியன், பூமி, சந்திரன்: ஆண்டின் முழு சந்திர கிரகணம் எங்கே எப்போது?.. முழு விவரம்!

சந்திர கிரகணத்தைப் பொறுத்தவரை, சூதக் காலம் பொதுவாக சந்திர கிரகணம் தொடங்குவதற்கு ஒன்பது மணி நேரத்திற்கு முன்பு தொடங்குகிறது.

Continues below advertisement

2022 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி நிகழ இருக்கிறது. இது முழு சந்திர கிரகணமாக (Complete lunar eclipse) இருக்கும், இது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் விழும்போது நிகழும். சந்திர கிரகணத்தின்போது நிலவு பூமியின் நிழல் மீது விழுகிறது. இந்த நிகழ்வின் போது, சந்திரன் அம்ப்ரா எனப்படும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் நுழைகிறது. இந்த நிகழ்வு நடக்கும் போது, சந்திரன் சிவப்பு நிறமாக மாறும்.

Continues below advertisement


சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி, கிரகணத்திற்கு முந்தைய காலகட்டத்தை "சூதக்" என்று சொல்வார்கள். சந்திர கிரகணத்தைப் பொறுத்தவரை, சூதக் காலம் பொதுவாக சந்திர கிரகணம் தொடங்குவதற்கு ஒன்பது மணி நேரத்திற்கு முன்பு தொடங்குகிறது. இந்துக்கள் சூதக் காலத்தை தீயகாலமாகக் கருதுகின்றனர். அப்போது மக்கள் புதிய வேலையைத் தொடங்குவதையோ அல்லது முக்கியமான முடிவுகளை எடுப்பதையோ தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். கிரகண காலத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்த நவம்பரில் நிகழும் கிரகணத்தை அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement