தமிழ்நாடு:
* விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் தியேட்டரில் வெளியானது. ரசிகர்கள் நள்ளிரவு முதலே கொண்டாட்டம்.
* வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
* தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
* பாஜக தேவையில்லாமல் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் நடக்கவே நடக்காது - முதலமைச்சர் ஸ்டாலின்
* தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
* தமிழ்நாடு பாஜக இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்காது. இந்தியை திணிக்க முயற்சித்தால் எதிர்ப்போம் - அண்ணாமலை
* சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
* சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டிடிவி தினகரனிடம் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
* சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா:
* நீதிபதியின் ஓய்வு வயது 65 என்பது சரியானதல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.
* பீரங்கிகளை அழிக்கும் இந்தியாவின் ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது
* முதலமைச்சர் நிதீஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டுவெடித்தது. இதுதொடர்பாக ஒருவர் கைது
உலகம்:
* அமெரிக்காவில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் படுகாயம்
* தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
* காயம் காரணமாக அடுத்த 2 போட்டிகளில் இருந்து சன் ரைசர்ஸ் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்
* ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை ருசித்தது. ஆர்சிபியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
* இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்