ஜிலு ஜிலு சிம்லா..
இயற்கை அழகு கொஞ்சும் சூழல் வாழ்தல் இனிது. இப்படியான ஆசை யாருக்குத்தான் இருக்காது. அப்படி இயற்கையில் பேரதிசயங்களுக்கு அருகில் வாழ்வதும் அருமையானதுதான். இமாலய மலைத்தொடருக்கு அருகில் அமைந்திருக்கிறது சிம்லா. குளு மணாலி, பனி மழையில் நனையலாம் என்றபடி இருக்கும் சூழல். மலைத்தொடர்கள், பச்சை பசேலென படர்திருக்கும் தாவரங்கள் சூழப்பட்ட ஒரு பகுதியில் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? ஏகாந்தமான அனுபவமாக இருக்கும். சிம்லாவில் நிறைய சுற்றுலா பகுதிகள் இருக்கின்றன. சுற்றாலு என்பது ஒரு வகையில் சிறப்பு என்றாலும், அதனால் ஏற்படும் குப்பைக் கழிவுகள் மேலாண்மை மிகவும் முக்கியம். இது சிம்லாவில் மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது வெளிநாடு இல்லை...
இதற்குச் சான்றாக மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படும் சாலை ஒன்றின் சாலையின் புகைப்படத்தை எரிக் சொல்ஹெம் (Erik Solheim) தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “ இன்கிரிபிள் இந்தியா- இது ஐரோப்பா இல்லை; பழுமையுடன் சுகாதாரமாக எழில் கொஞ்சும் சிம்லா’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு சிம்லா ஒரு சிறந்த தேர்வு, குளிர் காற்றுடன், பச்சை இலைகளும், வண்ண பூக்களும் மலை மீது படர்ந்திருப்பதையும், வெண் மேகங்களுக்கு அருகில் நின்று வானில் நட்சத்திரங்கள் பார்ப்பது, மலை மீது அடுக்கி வைக்கப்படிருக்கும் வீடுகளை ரசிப்பதுமாக காலத்தை கழிக்கலாம்.
இதற்கு முன்னர் எரிக் சொல்ஹெம் கர்நாடக மாநிலத்தின் கடற்கரை ஒன்றை தன் பக்கத்தில் பகிந்து சைக்கிளில் பயணம் செய்வதற்கு இது சிறந்த பாதை என்று குறிப்பிட்டிருந்தார்..
எரிக் சொல்ஹெம் நார்வேயை சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி, இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து இயங்கி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்