தெலுங்கானா மாநிலத்தில் இந்து கோயில்கள் அல்லது இந்து மதம் சார்ந்த கட்டிடங்கள் உள்ள இடங்களில் மசூதிகள் உருவாக்கப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று இந்தியத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.


தெலுங்கானவின் தொல்லியல் துறை  இந்துக்களின் புனித இடங்களாக கூறப்படுபவைகளை அழித்து மசூதிகள் கட்டப்படவில்லை என்று சொல்லியிருப்பது இந்துதுவா ஆதரவாளர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 


சமீபத்தில், தெலுங்கானா பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக பண்டி சஞ்சய் ( Bandi Sanjay)  தனது கட்சியினரிடம் மசூதிகளைத் தோண்டி பாருங்கள். அதில் சிவலிங்கம் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இவர் கூறிய ஆதாரமில்லாத குற்றச்சாட்டிற்கு இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்டிருக்கும் தகவல்கள் அதிரடி பதிலாக அமைந்துள்ளது. 


பண்டி சஞ்சயின் சர்ச்சை கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் ராபின் ஷாச்செயூஸ் (Robin Zaccheus) என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (Right to Information (RTI)) தெலுங்கானாவில் இந்து மதம் சார்ந்த தலங்களில் மசூதி அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த உண்மை தகவலை தரும்படி இந்தியத் தொல்லியல் துறையிடம் கேட்டுக்கொண்டார்.


கோல்கொண்டா கோட்டை உட்பட தெங்கானாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 8 இடங்களில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் வருகிறது.  அதை ஆய்வு செய்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ தெலுங்கானாவில் உள்ள தொன்மையான மசூதிகள் எதுவும் இந்து மதம் சார்ந்த இடங்களில் கட்டப்பட்டதற்கான ஆதாரம் இல்லை.” என்று பதிலளித்துள்ளது. 


பண்டி சஞ்சையின் சர்ச்சைக் கருத்து:


பா.ஜ.க. மாநிலத் தலைவரும்  கரீம்நகர் சட்டமன்ற உறுப்பினருமான பண்டி சஞ்சய் ( Bandi Sanjay) அசாவூதின் ஓவையிடம் (Asaduddin Owaisi ) ஒரு சவாலை முன்வைத்தார். அது  ‘mosque dig-up contest’, அதாவது மசூதிகள் கட்டப்பட்டுள்ள இடங்களை தோண்டினால் அங்கிருந்து இந்து மதம் சார்ந்த பொருட்களும், சிவலிங்கமும் கிடைக்கும் என்று சவால் விடுத்தார்.


இதோடுமட்டுமல்லாமல், மசூதி இருக்கும் இடங்களை தோண்டும் போது ’சவம்’ உயிரற்ற உடல்கள் கிடைத்தால் மசூதிகளை இஸ்லாமியர்களே வைத்து கொள்ளலாம். அதுவே, ’சிவம்’ சிவலிங்கம் எடுக்கப்பட்டால் அந்த இடங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 


இந்திய தொல்லியல் துறையின் பதில்:


தெலுங்கான  மாநில மக்கள் இதுபோன்ற உணமைக்கு புறம்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதுபோன்ற கருத்துகள் மதம் தூண்டல்களை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண