மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமயிக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாகவும், அரசியல் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம்


குஜராத்தைச் சேர்ந்த பிரதீக் என்பவருக்கும், நிர்மலா சீதாராமன் மகள் வங்கமயிக்கும் திருமணம் பிராமண முறைப்படி நடந்தது. உடுப்பி அடமாரு மடத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் மணமக்களை ஆசிர்வதிக்க வந்திருந்தனர். அடமாரு மடத்தின் வேத முறைப்படி இவர்கள் திருமணம் நடைபெற்றது. வங்கமயி மின்ட் லவுஞ்சின் ஃபீச்சர்ஸ் துறையில் புத்தகங்கள் மற்றும் கலாச்சாரப் பிரிவில் பணிபுரிகிறார். இதற்கு முன்பு தி ஹிந்து நாளிதழில் ஊடகவியலாளராக அவர் பணியாற்றினார்.






வைரலான வீடியோ


நார்த்வெஸ்டர்ன் மெடில் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்தில் ஜர்னலிசத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் இவர். திருமணத்தின்போது, வைரலான வீடியோக்களின் படி, வங்கமயி இளஞ்சிவப்பு நிற புடவையில் காணப்பட்டார், பிரதீக் வெள்ளை சால்வை மற்றும் வேஷ்டி அணிந்திருந்தார். நிர்மலா சீதாராமன் பிரகாசமான ஆரஞ்சு மற்றும், நீல நிற புடவை அணிந்திருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: TNPL: டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா 7-வது சீசன், வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது... சேலத்தில் 10 போட்டிகள்..


நிர்மலா சீதாராமனின் பழைய ட்வீட் 


செப்டம்பர் 2019 இல், நிர்மலா சீதாராமன், குழந்தையான பரகலா வங்கமாயியுடன் இருக்கும் புகைப்படத்தை முன்பு தனது ட்வீட்டில் படத்தைப் பகிர்ந்திருந்தார். ஒரு ட்வீட்டில், அவர் தனது மகளை ஒரு நண்பர், தத்துவவாதி மற்றும் வழிகாட்டி என்று விவரித்தார். "மகள்களைப் பற்றி இன்னும் நிறைய சொல்ல முடியும். என் மகளுடன் ஒரு #த்ரோபேக்பிக். ஒரு நண்பர், தத்துவவாதி மற்றும் வழிகாட்டி," என்று மகள்கள் தினத்தன்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ட்வீட் செய்திருந்தார்.






நிர்மலா சீதாராமனின் கணவர்


நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ஒரு அரசியல் பொருளாதார நிபுணர் ஆவார், இவர் தகவல் தொடர்பு ஆலோசகராகவும், ஜூலை 2014 முதல் ஜூன் 2018 வரை ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் கேபினட் அந்தஸ்தில் பதவி வகித்துள்ளார். அவர் பிரபலமான யூடியூப் சேனலான 'மிட்வீக் மேட்டர்ஸ்' ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அவர் இந்தியாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமகால சமூகம் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறார். இவர் தீவிர மோடி மற்றும் பாஜக எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.