டிஎன்ஏ-வின் சேதத்தை சரி செய்ய உதவும் என்சைம்களை (enzyme) செயல்படுத்துவதன் மூலம் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புற்று நோய்-க்கு தற்போது அளிக்கப்படும் வைத்தியத்திற்கு பொருந்ததாக நோயாளிகளுக்கு இந்த புதிய மருத்துவ முறை சிறப்பான மருத்துவமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புற்று நோய்க்கு புதிய சிகிச்சை முறை:
தற்போதுள்ள காம்ப்டோதெசின், டோபோடெக்கான், இரினோடெகான் போன்ற கான்சர் எதிர்ப்பு மருந்துகள் டோபோஐசோமெரேஸ் 1 (டாப் 1) எனப்படும் டி.என்.ஏ பிரதிபலிப்பு மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்கு முக்கியமான ஒரு நொதியை (enzyme) எதிபார்க்கின்றன.
புற்றுநோய் செல்கள் பெரும்பாலும் இத்தகைய ஒற்றை-தன்மை சிகிச்சைகளுக்கு எதிர்ப்பை உருவாக்குகின்றன. எனவே, மாற்று சிகிச்சை முறைகள் தேவைப்படுகின்றன. இதுபோன்ற சிகிச்சை முறைகளை ஆராய்வதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான கொல்கத்தாவின் இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்க விஞ்ஞானிகள், உயிரணுப் பிரிப்பின் போது புற்றுநோய் செல்கள் டி.என்.ஏவை எவ்வாறு சரிசெய்கின்றன மற்றும் டாப் 1 என்ற நொதியை குறிவைக்கும் கீமோதெரபிக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை ஆராய்ந்தனர்.
அறிவியலின் அடுத்த உச்சம்:
எம்போ ஆராய்ச்சி இதழ் 2024-ல் வெளியிடப்பட்ட ஆய்வு இரண்டு முக்கிய புரதங்களை எடுத்துக்காட்டுகிறது . அவை சைக்ளின்-சார்ந்த கைனேஸ் 1 (CDK1) மற்றும் டைரோசில்-டிஎன்ஏ பாஸ்போடிஸ்டெரேஸ் 1 (TDP1). ஆகும். பேராசிரியர் பேனு பிரதா தாஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், டி.என்.ஏ பழுது நீக்கும் நொதியான டி.டி.பி 1 -ஐ செயல்படுத்துவதன் மூலம் புற்றுநோய் செல்கள் தற்போதுள்ள மருந்துகளின் விளைவை எதிர்க்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர்.
உயிரணுப் பிரிப்பின் போது புற்றுநோய் செல்கள் டி.என்.ஏவை எவ்வாறு சரிசெய்கின்றன மற்றும் டோபோஐசோமெரேஸ் 1 (டாப் 1) என்ற நொதியால் தூண்டப்பட்ட டி.என்.ஏ சேதத்திற்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை ஆராயும் போது, விஞ்ஞானிகள் டி.என்.ஏ பழுது நீக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் சி.டி.கே 1 மற்றும் டி.டி.பி 1 புரதங்களின் முக்கியமான பாத்திரங்களை கண்டுபிடித்தனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களிடையே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகின்றன. பெண்களிடையே மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 131 அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகள் உள்ளன.