இயக்குநர் லீனா மணிமேகலையின் காளி ஆவணப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அந்த படத்தையும் ஆதரிக்கவில்லை அதன் போஸ்டரையும் ஆதரிக்கவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா.


சர்ச்சையின் பின்னணி:


இயக்குநர் லீனா மணிமேகலை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த அவரது படத்தின் போஸ்டர் ஒன்று காளியை அவமதிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், அவர் மீது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் லீனா மணிமேகலை தற்போது கனடாவின் டொரண்டோ பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது திரைப்படத்தின் போஸ்டரை அவர் பகிர்ந்திருந்தார். இதில் இந்துக் கடவுளான காளியின் வேடத்தில் ஒரு பெண் புகைபிடிக்கும் விதமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் பின்னணியின் தன்பாலீர்ப்பாளர்களின் அடையாளமான வானவில் கொடியும் இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 







டெல்லியைச் சேர்ந்த அஜய் கௌதம் என்பவர் இந்த போஸ்டர் தொடர்பாக டெல்லி காவல்துறையினரிடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதியவும், படத்தின் மீது தடை விதிக்கவும் புகார் அளித்துள்ளார். இவர் பசுப் பாதுகாப்பு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் வலதுசாரி அமைப்பினர் பலரும் இயக்குநர் லீனா மணிமேகலையைக் கடுமையாக சாடி வருகின்றனர். 
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா இது தொடர்பாக ஆதரவு தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.


திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. விளக்கம்:


இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர், சங்கிகளே உங்களுக்கு நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். பொய் சொல்வது எப்போதுமே உங்களை சிறந்த இந்துக்களாக அடையாளப்படுத்தாது. நான் எந்த படத்தையும் ஆதரிக்கவில்லை. எந்த போஸ்டரையும் ஆதரிக்கவில்லை.






ஏன் புகைத்தல் என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்கவில்லை. நீங்கள் எல்லோரும் தாராபீத்தில் உள்ள காளி மாதேவியின் கோயிலுக்குச் சென்று பார்க்குமாறு கூறுகிறேன். அங்கு காளிக்கு படைக்கப்படும் உணவையும், பானத்தையும் கண்ணால் கண்டு வருவீர்களாக. ஜெய் மா தாரா என்று பதிவிட்டுள்ளார்.