இந்து கடவுள் படமிருந்த பேப்பரில் சிக்கனை சுற்றிக் கொடுத்த சிக்கன் கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரைத் தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
மத உணர்வுகளை இழிவுப்படுத்தியதாக கூறி தாலிப் ஹுசைன் என்ற சிக்கன் கடைக்காரரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. சிக்கன் கடைக்காரர் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் விதமாக இந்து கடவுள்கள் படமிருக்கும் பேப்பர்களில் சிக்கனை சுற்றி விற்று வருகிறார் என ஒரு சிலர் போலீசாரில் புகாரளித்துள்ளனர்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், விசாரணைக்காக ஹுசைன் கடைக்குச் சென்றதாகவும் அவர்களை ஹுசைன் தாக்கியதாகவு, கத்தியைக் கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதே குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
மத உணர்வுகளை இழிவுப்படுத்துதல், இரு பிரிவினர் இடையே சண்டையை தூண்டுதல், கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஹுசைன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மிந்த்ராவும் இதே மாதிரியான சிக்கலில் சிக்கியது.மிந்த்ரா, மகாபாரதத்தின் ஒரு காட்சியை சித்தரித்து ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில் திரௌவுபதியின் சேலையை துச்சாதனன் அவிழ்ப்பது போலவும். மிந்த்ரா ஆப்பில் கிருஷ்ணர் 'extra long sareer' என்று புடவைகளைத் தேடுவதாகவும் கிராஃபிக்ஸில் வரைந்திருக்கிறார்கள். இந்த விளம்பரம் வித்யாசத்திற்காகவும், நகைச்சுவைக்காகவும் செய்யப்பட்டிருந்தாலும், அது பலரிடையே வெறுப்பை சம்பாதித்தது - இந்து மதக் காவியத்திலிருந்து காட்சியை கேலி செய்ததற்காக அவர்கள் கிராஃபிக்கை நெட்டிசன்கள் தாக்கினர், இது மதத்தை அவதூறு செய்வதாகும் என்று கமெண்ட் செய்து எதிர்ப்பை பதிவு செய்தனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்