ஓடுபாதையிலிருந்து விலகிய இண்டிகோ:


ஓடு பாதையில் இருந்து சற்று விலகி சென்ற இண்டிகோ விமானம் சேருக்குள் சிக்கி கொண்டது. அசாம்மில் உள்ள ஜோர்ஹாட் விமான தளத்தில் ஓடு பாதையில் இருந்து விலகி சென்ற இண்டிகோ விமானம், அருகில் உள்ள ஈரமான நிலப்பகுதிக்குள் சிக்கி கொண்டது.


அசாம் மாநிலத்தில் உள்ள  ஜோர்ஹாட் விமான தளத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று புறப்படுவதாக இருந்த இண்டிகோ விமானம் 6 F-757, ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது. அப்போது அருகில் உள்ள ஈரமான நிலப்பகுதிக்குள் சென்று சிக்கி கொண்டது.  


இந்த நிகழ்வு குறித்து ட்விட்டர் பயனாளர் ஒருவர் இண்டிகோ விமானம் ஈரமான நிலத்தில் சிக்கியிருக்கும் படத்தைப் பதிவேற்றியுள்ளார், அதில்  ஓடுபாதையில் இருந்து  விலகிச் சென்ற விமானத்தின் இரு சக்கரங்கள் புல்வெளியில் சிக்கிக் கொண்டுள்ளது தெரிகிறது. மேலும் அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், நேற்று 2.20 pm மணிக்கு புறப்படுவதாக இருந்த விமானம், இந்த நிகழ்வு காரணமாக தாமதமானது என தெரிவித்துள்ளார்.






இண்டிகோ விமானம் தரப்பு:


இது குறித்து இண்டிகோ விமானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த சம்பவத்துக்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவுடன் பேசி வருகிறோம். மேலும் உங்கள் PNR எண்ணை எங்களுக்கு தெரிய படுத்துங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து AAI அதிகாரி கூறுகையில் விமானத்தில் சில தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாகவும், அதன் காரணமாக, நேற்று இரவு விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும் விமானத்தில் 98 பயணிகள் இருந்ததாகவும், அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளனதாகவும் AAI அதிகாரி தெரிவித்தார்.


Also Read: MiG-21 Fighter Jet Crash: மிக் 21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து... 2 விமானிகள் பலி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண