Shocking Video : பெங்களூருவில் சாலையில் நின்ற சிறுவனை, நாய் கடித்து குதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் அட்டகாசம்:
நாட்டில் சமீபகாலமாக தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முதலில் இந்த சம்பவம் கேரளாவில் அதிகளவில் இருந்தது. அதனை தொடர்ந்து தெலங்கானா, கர்நாடகா, மும்பை என பல்வேறு பகுதியில் தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட தெலங்கானாவின் ஹனுமகொண்டா மாவட்டத்தில் மட்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் தெருநாய் கடி சம்பவங்கள் 29 முறை அரங்கேறியுள்ளது.
ஹைதரபாத்தின் ஆம்பர்பேட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 5 வயது சிறுவன் தெருநாய் கடித்து உயிரிழந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தெரு நாய்க்கடி சம்பவத்தால் பலரும் அடிக்கடி பாதிக்கப்படுவதால், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சாலையில் நின்ற சிறுவன்
இந்நிலையில், மற்றொரு சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கே.ஆர். புரம் தெருவில் இன்று காலை 11 மணியவில் 9 வயது சிறுவன் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த தெருவில் ஏராளமானவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். ஒரே பரபரப்பாக அந்த தெரு இருந்தது. அந்த வேலையில், கே.ஆர்.புரம் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு எதிரில் 9 வயது சிறுவன் நின்று கொண்டிருந்தான். அப்போது திடீரென ஒரு வீட்டில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் (German Shepherd Dog) ஒன்று அந்த சிறுவன் மீது பாய்ந்தது.
கடித்து குதறிய நாய்
அதன்பின், அந்த சிறுவனை கீழே தள்ளி, கடித்து குதறியது. அக்கம் பக்கத்தினர் அந்த நாயை விரட்ட முயற்சித்தபோது, அந்த நாய் சிறுவனை விடாமல் கடித்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் அந்த நாயை பிடித்து இழுக்க முயன்றார். அப்போதும் கூட அந்த நாய் சிறுவனை விடுவதுபோல் தெரியவில்லை. எப்படியோ ஒரு கட்டத்தில் அருகில் இருந்த பெண் நாயை பிடித்து இழுத்துள்ளார். இதன்பின், அந்த சிறுவன் படுகாயத்துடன் கிடந்துள்ளான்.
உடனே இதனை அறிந்த அக்கம் பக்கத்தின் ஓடிவந்து சிறுவனை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.