தமிழ்நாடு:
- பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து.
- என்.எல்.சியில் 1500 மெகாவாட் மின் உற்பத்தி நிலக்கரியின்மையால் பாதிப்பு
- விசாரணைக்காக காணொலி வாயிலாக ஆஜரானார் அமைச்சர் செந்தில் பாலாஜி; ஜுலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவு
- சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிப்பு - வேலூர் நீதிமன்றம் உத்தரவு
- பெருங்களத்தூரில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் மேம்பாலம் திறப்பு - போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை
- மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றும் பாகுபலி யானையை தேடும் பணியை கைவிட்ட வனத்துறை
- மதுரை மெட்ரோ பணிகள் 2027ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு; 18 நிலையங்களுக்கு பதிலாக 24 நிலையங்கள் அமைக்க முடிவு
- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 82 வயதில் முனைவர் பட்டம் மற்றும் தங்கம் பெற்று முதியவர் அசத்தல்
இந்தியா
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக அறிவிப்பு
- கரும்பு குவிண்டாலுக்கு 315 ரூபாய் அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல்
- கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக இன்று செல்கிறார் ராகுல் காந்தி
- சட்டீஸ்கர் மாநில துணை முதல்வராக டி.எஸ்.சிங் தியோ நியமனம்.
உலகம்
- சவுதி அரேபியா மெக்காவில் சாத்தன் மீது கல் எறியும் வழிபாடு பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
- டைட்டன் விபத்தில் இறந்தவர்களின் உடல் பாகங்களை மீட்ட கனடா நாட்டுக்கப்பல்
விளையாட்டு
- தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை வென்றது.
- ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம்; முதல்நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவிப்பு
- டிஎன்பிஎல் போட்டியில் திருப்பூர் அணியை திண்டுக்கல் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
- டிஎன்பிஎல் போட்டியில் இன்று மதுரை மற்றும் திருச்சி அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன.