நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடெட் (NDTV) நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் விளம்பரதாரர் குழுவான (promoter group vehicle) RRPRH -இன் இயக்குநர்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.


NDTV நிறுவனர்களால் ஆதரிக்கப்படும் ஒரு நிறுவனம், அந்த நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமத்தின் ஒரு பிரிவுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது, இது பில்லியனர் கவுதம் அதானி தலைமையிலான குழுமத்தை மீடியா நிறுவனத்தின் மேல் தனது ஆதிகத்தை செலுத்த ஒரு படி நெருக்கமாக கொண்டு செல்லும் என கருதப்படுகிறது.






பங்குச் சந்தைகளுக்கான அறிக்கையில், NDTV, புரொமோட்டர் குரூப் (promoter group vehicle) RRPR ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் (RRPRH) இயக்குநர்கள் குழு, நடத்திய கூட்டத்தில்:


 1. திரு. சுதிப்தா பட்டாச்சார்யா, திரு. சஞ்சய் புகாலியா, மற்றும் திரு. செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் RRPRH வாரியத்தில் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது உடனடியாக அமலுக்கு வரும் எனவும்,


2. டாக்டர் பிரணாய் ராய் மற்றும் திருமதி ராதிகா ராய் ஆகியோர் RRPRH வாரியத்தில் இயக்குநர்களாக இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும், இது நவம்பர் 29, 2022 இருந்து அமலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


NDTVயின் சிறுபான்மை முதலீட்டாளர்களிடமிருந்து 16.76 மில்லியன் பங்குகள் அல்லது 26% பங்குகளை வாங்குவதற்கு அதானி குழுமம் டிசம்பர் 5 வரை திறந்த சலுகையை (open offer) வழங்குகிறது. அதானி குழுமம் ஆகஸ்ட் மாதம் ஊடக நிறுவனத்தில் மறைமுகமாக 29.18% பங்குகளை வாங்கிய பிறகு திறந்த சலுகையை (open offer) நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


திறந்த சலுகை என்றால் என்ன: 


SEBIஇன் பங்குகள் மற்றும் கையகப்படுத்துதல்களின் விதிகளின்படி, ஒரு திறந்த சலுகை என்பது பங்குதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலையில் இலக்கு நிறுவனத்தில் தங்கள் பங்குகளை டெண்டர் செய்ய அழைக்கும் கையகப்படுத்தும் சலுகையாகும்.


ஒரு திறந்த சலுகையின் முதன்மை நோக்கம், இலக்கு நிறுவனத்தில் நிகழும் கட்டுப்பாட்டில் ஏற்படும் மாற்றம் அல்லது பங்குகளை கணிசமான கையகப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வெளியேறும் விருப்பத்தை வழங்குவதாகும்.


இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவின் மூலதன சந்தை கட்டுப்பாட்டாளர்களால் திறந்த சலுகை அங்கீகரிக்கப்பட்டது. அதானி குழுமம் தனது நிலக்கரி சார்ந்த வணிகங்களைத் தாண்டி விமான நிலையங்கள், டிஜிட்டல் மையங்கள், சிமென்ட்கள், பசுமை ஆற்றல் மற்றும் இப்போது ஊடகங்கள் என பல்வகைப்படுத்தியதால், அதானி குழுமம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.