இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 






தற்கொலைக்கான காரணங்கள் : 


தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 


மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் : 



  1. மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)

  2. தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)

  3. மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)

  4. மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)

  5. கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)


அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது. 


இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில் 50.4% முதல் ஐந்து மாநிலங்களில் உள்ளது. அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 49.6% தற்கொலைகள் பதிவாகியுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு - 39.7%, சிக்கிம் 39.2% ,புதுச்சேரி -31.8%, தெலுங்கானா - 26.9% மற்றும் கேரளா 26.9% ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. 


மேலும் படிக்க : IND vs PAK, Asia Cup Win: ஒளியே வழியாக மலையே படியாக..இனிஒரு விதி செய்வோம்.. இந்திய வெற்றியை கொண்டாடும் மக்கள்


உத்தரப் பிரதேசம் :


இந்தியாவில் மக்கள்தொகை அடிப்படையில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் (மக்கள்தொகையில் 16.9%) மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளது. கடந்த 2021 ம் ஆண்டு 3.6% வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. 


யூனியன் பிரதேசங்கள் : 


யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் 2840 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. 504 தற்கொலைகளுடன் புதுச்சேரி இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், நாட்டின் 53 மெகாசிட்டிகளில் 25,891 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது.