மகாராஷ்டிரா அமராவதி மாவட்டத்தில் இரண்டு வயது சிறுமி, தாத்தா வாங்கி கொடுத்த பலூனில் எரிவாயு சிலிண்டர் மூலம் காற்றி நிரப்பி கொண்டிருந்த போது, அது  வெடித்துச் சிதறியது. இதில், அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாக காவல்துறை அலுவலர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார்.


நாக்பூரிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள அச்சல்பூர் தாலுகாவில் உள்ள ஷிண்டி கிராமத்தில், விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான தொழிலில் காளைகள் மற்றும் எருதுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கொண்டாடப்பட்ட தன்ஹா போல திருவிழாவிற்கு குழந்தை தனது தாத்தாவுடன் சென்றிருந்தபோது இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்தது.


 






பலூன் வாங்கும் போது, ​​காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதாக காவல்துறை அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறை அலுவலர் கூறுகையில், "சிலிண்டரின் ஒரு பகுதி அவரது காலில் மோதியதால் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என்றார்.


 






இது குறித்து அச்சல்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவிற்கு சென்ற குழந்தை, சிலிண்டர் வெடித்து சிதறியதில் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், முன்னதாக நடந்திருக்கின்றன. பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டரை இதுபோன்ற விவகாரங்களுக்காக பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.


முறையான ஒழுங்குமுறைகள் மற்றும் விதிகள் இதற்காக வகுக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இம்மாதிரியான விபத்துகளை தவிர்க்க முடியும்.