நடாஷா பரத்வாஜ் என்பவர் நேற்று ஸ்விக்கியில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அந்த பிரியாணியில் இறைச்சி துண்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.


ஸ்விகி சொமேட்டோ ஆகிய இரண்டும் அனைவருக்கும் மிகவும் பரீட்சியமான வர்த்தைதான். இவை உணவு டெலிவெரி செய்யும் நிறுவனமாகும். 2020-ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டது. பின் உணவகங்களில் மக்கள் உணவருந்த தடை விதிக்கப்பட்டது வெறும் பார்சல் சர்வீஸ் மட்டும் தொடரலாம் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தனர். வீட்டில் சமைத்து சாப்பிட முடியாதவர்கள் ஸ்விக்கி சொமோட்டோ போன்ற செயலி மூலம் உணவை ஆர்டர் செய்து வந்தனர். 2020 முதல் தற்போது வரை மக்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்தை விடவில்லை.






அந்த வகையில் நடாஷா பரத்வாஜ் என்பவர் நேற்று ஸ்விகியில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அந்த பிரியாணியில் இறைச்சி துண்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். இது தொடர்பாக புகார் செய்ய அவர் டிவிட்டர் பக்கத்தில் ஸ்விக்கி நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சைவ பிரியர்கள் யாரேனும் ஸ்விக்கி மூலம் உணவை ஆர்டர் செய்ய நினைத்தால் ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்து பாருங்கள். சைவம் என குறிப்பிட்ட உணவகத்தில் பிரியாணியை ஆர்டர் செய்தேன். ஆனால் அதில் இறைச்சி துண்டு இருக்கிறது. இது போன்ற பிழைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் ஸ்விக்கி நிர்வாகியிடம் இது தொடர்பாக கேட்டதற்கு, அந்த உணவகம் அசைவ உணவகம்தான். ஆனால் எப்படி சைவம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என்கிறார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட உணவகத்திடம் விளக்கம் கேட்கப்படும் என பதிலளித்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.


இந்த சம்பவம் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உணவு டெலிவெரியில் இது போன்ற பிழை ஏற்படுவது இது முதல்முறை அல்ல பல சம்பவங்கள் இது போல் இடம்பெற்றுள்ளது என நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்